Tamil Latest Kids News சிறுவர்களுக்கான உலக செய்திகள்
செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா, அங்கு உயிரினங்கள் ஏதேனும் வாழ்கிறதா என்பது குறித்து உலகெங்கிலும் உள்ள விண்வெளி விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இது குறித்த ஆய்வுகளை மேற்கொள்வதற்காக நாசா (NASA) விண்கலங்களை அனுப்பி ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், வியாழன் கிரகத்தில் உயிரினங்கள் ஏதேனும் வாழ்கிறதா என்பது குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள நாசா ஏற்பாடுகளை தொடங்கியுள்ளது. இது தொடர்பாக நாசா மற்றும் எலோன் மஸ்கின் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் இடையில் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்த பணி 2024 அக்டோபரில் தொடங்கும் என கூறப்படுகிறது.
அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா வியாழன் கிரகத்தில் உயிர்களைத் தேடும் பணியில், ஆய்வினை தொடங்க எலோன் மஸ்க்கின் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. யுரோப்பா கிளிப்பர் (Europa Clipper) என்னும் இந்த மிஷன் திட்டத்தில், 2024 அக்டோபர் மாதத்தில் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து பால்கன் ஹெவி ராக்கெட் (Falcon Heavy rocket) ஏவப்படும் என்று தேசிய ஏரோநாட்டிக்ஸ் மற்றும் விண்வெளி நிர்வாகம் (நாசா) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இடையே இதற்காக $178 மில்லியன் ஒப்பந்தம் கையெழுத்தானது. வியாழன் கிரகம், பூமியிலிருந்து சுமார் 390 மில்லியன் மைல்கள் (63 கோடி கிலோமீட்டர்) தொலைவில் உள்ளது, மேலும் இந்த பயணம் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு அறிக்கையில், நாசா யூரோபா கிளிப்பர் (ராக்கெட்) வியாழன் கிரகம் குறித்து விரிவான ஆய்வை நடத்தும் என்றும் இந்த கிரகத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாதகமான நிலைமைகள் உள்ளதா என்பது குறித்து ஆராயப்படும் என்றும் கூறினார். இந்த ராக்கெட்டுகளில் உயர் தெளிவுத்திறன் கொண்ட கேமராக்கள், ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மற்றும் பிற வகை நவீன தொழில்நுட்ப கருவிகள் பொருத்தப்படும். இது தவிர, பனி அடுக்குக்குள் நுழைவதற்கான ரேடாரும் அதில் சேர்க்கப்படும்.
kidhours – Tamil Latest Kids News
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.