tamil kids news siruvar neram சிறுவர்களுக்கான உலக செய்திகள்
சகோதரர்கள் மோசஸ் மற்றும் மொன்டோரூபியோ, சான் பிரான்சிஸ்கோ நகரத்தைச் சேர்ந்தவர்கள். Rope Technicians எனப்படும் கயிற்றை லாவகமாக பயன்படுத்துவதில் இருவரும் கைதேர்ந்த நிபுணர்கள். இவர்களுக்கு யோஸ்மைட் தேசிய பூங்கா மற்றும் கலிஃபோர்னியா நகரத்துக்கு இடையே இருக்கும் மிகப்பெரிய அளவிலான மலை முகட்டை கயிற்றின் மூலம் கடக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.
இதற்காக கடந்த ஓராண்டாக தங்களை தயார்படுத்திக் கொண்ட சகோதரர்கள் இருவரும் அந்தப் பகுதியின் நில அமைப்பு, காற்றின் வேகம் ஆகியவைக் குறித்து அலசி ஆராய்ந்துள்ளனர்.
தாங்கள் கடக்க திட்டமிட்டிருக்கும் மலை முகடுகளுக்கு நேரடியாக பல முறை சென்ற அவர்கள் எந்த இடத்தில் இருந்து தொடங்க வேண்டும், அதற்கு தேவையான பொருட்கள் குறித்து தெளிவாக ஒரு வரையறையை தயார் செய்துள்ளனர்.
அதன்படி, 18 நண்பர்களின் உதவியுடன் யோஸ்மைட் தேசிய பூங்காவின் டட் பாயிண்ட் (Tadt Point) பகுதிக்கு சென்ற அவர்கள், அங்கிருந்து 2,800 அடி என்ற மிக நீளமான மலை முகட்டை கடந்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய மோசஸ், ” யோஸ்மைட் தேசிய பூங்காவுக்கும், கலிஃபோர்னியா நகரத்துக்கும் இடையே இருக்கும் மிக நீளமான மலை முகட்டை கடக்க வேண்டும் என்ற ஆர்வம் எங்கள் இருவருக்கும் ஓராண்டுக்கும் மேலாகவே இருந்தது. முதன்முறையாக நாங்கள் இங்கு வந்தபோது, மலை முகட்டை பார்த்தவுடன் எங்களுக்குள் அந்த ஆர்வம் ஏற்பட்டது.
இப்போது படைத்திருக்கும் சாதனை என்பது எளிதான ஒன்று அல்ல. பாறைகள், கற் குவியல்கள் என பல கடிமான பாதைகளை கடந்து, இங்கிருந்து தொடங்க வேண்டும் என்பதை தேர்வு செய்தவற்கு எங்களுக்கு பல நாட்கள் தேவைப்பட்டது.
வெப் கேமரா உள்ளிட்டவைகளின் உதவியுடன் இடத்தை தீவிரமாக அலசி ஆராய்ந்தோம். எங்களுக்கு நண்பர்களும் உதவியாக இருந்தார்கள். காற்றின் வேகம் உள்ளிட்டவைகளை உடனுக்குடன் கண்காணிப்பதற்கு டெக்னாலஜியை பெரும் உதவியாக இருந்தது. எங்களால் முடியும் என்பதில் உறுதியாக இருந்தோம்.
தற்போது, 2, 800 அடி நீளமான மலை முகடுகளை அந்தரத்தில் நடந்து சென்று கடந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.
kidhours – tamil kids news