Tamil kids கல்வி புவியியல்
புவி மேற்பரப்பில் உள்ள அனைத்து செயன்முறைக்கும் மனிதனின் சமூக, பொருளாதார செயற்பாடுகள் அனைத்துக்கும் வானிலை நேரடியாக செல்வாக்கு செலுத்துகின்றது. பௌதீக சூழலின் இயற்கை செயற்பாடுகளில் வானிலை மூலகங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. குறிப்பாக. நீரியல் வட்டம், உயிர்ப்பல்வகைமை, நிலவுருவாக்க செயன்முறை, உயிரியல் செயற்பாடுகள் அனைத்துக்கும் வானிலை மூலகங்கள் ஆதாரமாக உள்ளன.
புவி மேற்பரப்பில் உள்ள நீர் கோளம், கற்கோளம், வளிக்கோளம் என்பவற்றினுடாக வட்டமான முறையில் சுற்றோட்டமடைகின்றது. வளிக்கோளம் கற்கோளம் இடையே திண்ம, திரவ, வாயு நிலைகளில் நீர் மாற்றமடையும் செயன்முறை நீரியல் வட்டம் எனப்படும். நீரியல் வட்டத்தின் செயற்பாடு காலநிலை மூலகங்களான வெப்பநிலை, மழைவீழ்ச்சி என்ற இரண்டையும் அடிப்படையாக கொண்டே நிகழ்கின்றது.
இதற்கு ஏற்ப ஆவியாக்கம், ஆவியீர்ப்பு, ஒடுக்குதல், படிவுவீழ்ச்சி என்பன நிகழ்கின்றன.
புவியில் நிலவுருவங்கள் உருவாவதில் பௌதீக வானிலையாலழிதல் செயன்முறைக்கும் இடையே தொடர்புகள் காணப்படுகின்றன. உலகின் பல்வேறு பிரதேசங்களில் நிலவுருவங்கள் தோன்றுவதற்கு இரசாயன வானிலையாலழிதலும் காரணமாகும்.
வெப்பநிலை மாற்றமடைவதற்கு ஏற்ப பாறைகளில் நிகழும் சுருங்குதல், விரித்தாள் செயற்பாட்டின் விளைவாக பாறைகள் துணிக்கைகளாக உடைத்தல் பௌதீக வானிலையாலழிதல் எனப்படும். குறிப்பாக நாளாந்த வெப்பவீச்சு மாற்றமடைதல் பௌதீக வானிலையாலழிதலில் தாக்கம் செலுத்துகின்றது.
இன்றுவரை உலக நாடுகள் பெருமளவில் குறிப்பிட்ட காலநிலை மாற்றங்களுக்கோ சூழல் பிரச்சனைக்கோ முகம் கொடுக்கின்றன என்பது வெளிப்படையான விடயமாகும்.
ஆசிரியர் பற்றி திருக்குறள் கூறாமையின் காரணம்
வெள்ளப்பெருக்கு, வறட்சி,மண்சரிவு, இடிமின்னல், புயல், பூகோள வெப்பமடைதல் போன்ற பிரச்சனைகள் இவற்றுள் சிலவாகும். குறிப்பாக ஐவ் அனர்தங்கள் தோன்றுவதற்கான பிரதான காரணங்களாக வெப்பநிலை, மழைவீழ்ச்சி, அமுக்கம், காற்று, ஈரப்பதன் போன்ற காலநிலை மூலகங்கள் மாற்றமடைதலாகும்.
வானிலை பல்வேறு மனித செயற்பாடுகளில் நேரடியாக செல்வாக்கு செலுத்துகின்றது. விவசாய பயிர்களை தெரிவு செய்தல், பயிர் செய்யும் காலத்தை தெரிவு செய்தல், விதை விதைத்தல், அறுவடை ஆகியவற்றில் விவசாயிகள் வானிலை மூலகங்களின் அடிப்படையில் மேற்கொள்கின்றனர். இதுதவிர மீன்பிடி கைத்தொழிலில் குறிப்பாக காற்று நிலைமைகள் நேரடியாக செல்வாக்கு செலுத்துகின்றது. மே தொடக்கஞ் செப்டெம்பர் வரை தென்மேற்கு பருவக்காற்று நிலவும் காலங்களில் இலங்கையின் தெற்கு கரையோர பிரதேசங்களில் கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும். இக்காலத்தில் தென்பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல மாட்டார்கள்.
சிலர் கிழக்கு கரைக்கு இடம்பெயர்த்து செல்வார்கள்.
சுற்றுலா கைத்தொழில் விருத்தியிலும் வானிலை மாற்றங்கள் செல்வாக்கு செலுத்துகின்றது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் குளிர்பருவம் ஆரம்பிக்கும் நவம்பர்-மார்ச் வரை இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும். இத்தகைய மனித நடவடிக்கைகளில் காலத்துக்கேற்ற கோலங்கள் கட்டியெழுப்புவது வானிலை மூலகங்கள் மாற்றங்கள் மீதானது என்பது வெளிப்படும்.
தொடர்பாடல் , விமான பயணம், கடற்பயணம் போன்ற பணிகளுக்கும் வானிலை நிலைமைகளை நேரடியாக செல்வாக்கு செலுத்துகின்றன. வானிலை செய்மதிகள், ராடார் போன்ற தொலைதொடர்பாடல் முறைகளை பயன்படுத்தி பெறப்பட்ட வளிமண்டல தரவுகள் வளிமண்டல நிலைமைகள் பற்றியும், வானிலை எதிர்வு கூறல் போன்றவற்றிற்கு பயன்படுத்தப்படுகின்றன. இதிலிருந்து பௌதீக சூழலின் செயற்பாடுகளுக்கு மட்டுமில்லாது மனித நடவடிக்கைகளுக்கும் வானிலை முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகின்றது.
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
kidhours
tamil,tamil to english,how tall is peppa pig,how tall is kevin hart,how tall is ariana grande
,how tall is mount everest,how tall is the eiffel tower,how tall is kendall jenner,tamil nadu
,tamil news,how tall is levi,tamil movies,tamil translation,tamil language,tamil songs
,tamil rockers.com,tamil calendar,tamilwin,tamil movie download,tamil typing
,tamil new movies,tamil new year 2020,tamil actress,tamil movies 2020,tamil alphabet
,tamil rockers isaimini,tamil new year,tamil comedy movies,tamil google translate
,tamil letters