தாய்லாந்தில் சுமார் 10 கி.மீ. நீளமுள்ள, சிக்கலான குகை அமைப்பு ஒன்றுக்கு சாகசப் பயணம் மேற்கொண்டது 12 பேர் கொண்ட சிறுவன் அணியும் அவர்களது பயிற்சியாளரும், திடீர் மழை வெள்ளம் சுமார் 1 கி.மீ. ஆழத்தில் சிக்கிக் கொண்டனர்.
9 நாள் போராட்டத்திற்குப் பின்னர் அவர்கள் இருக்கும் இடம் தெரிய வந்தது. திட்டமிடப்பட்ட, மிக ஆபத்தான மீட்பு நடவடிக்கை மூலம் அவர்கள் அனைவரும் செவ்வாய் கிழமை மீ ட்கப்பட்டனர்.. ‘காட்டுப் பன்றிகள்’ என பெயரிடப்பட்ட இந்த சிறுவர் கால்பந்து அணி குகையில் இழந்திருந்தும், முதல் மீட்கப்பட்டது வரை 17 நாள் போராட்டத்தின் முக்கிய நிகழ்வுகள் இங்கே ..
தாய்லாந்தில் சுமார் 10 கி.மீ. நீளமுள்ள ஆழமான தாம் லுவாங் மலைக்குகைக்கு யூன் 23 அன்று சாகசப் பயணம் மேற்கொண்ட 12 பேர் கொண்ட சிறுவன் அணியும் அவர்களது பயிற்சியாளரும் குகையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கால் உள்ளே சிக்கிக்கொண்டனர்.
முதல் நாள் நடந்தது என்ன?
தாய்லாந்து குகை: 4 சிறுவர்கள் மீட்பு, மற்றவர்கள் மீட்க தயார் செய்த குழு குகைக்கு வெளியே அவர்கள் தயாரன நிலையில் வைக்கப்பட்டிருந்தனா் , , யாரோ குகைக்குள் சிக்கிக் கொண்டிருப்பதை அறிந்த அப்பிரதேச உயர் அதிகாரிகள் அரசங்கத்திட்கு அழுத்தம் கொடுத்தனர் அதனையடுத்து அவர்கள் மீட்கும் நடவடிக்கை அன்றிரவே துரிதப்படுத்தப்பட்டது. அவர்கள் உள்ளே சென்றிருந்த நிலையில், அப்பிரதேசத்தில் ஏற்பட்ட கடும் மழைவீழ்ச்சி காரணமாக குகைக்குள் பாயும் வெள்ளமும் குகையின் வெளியேறும் வாயில்களும் அடைத்து ஒருந்தமையினால் , இந்த 13 பேர் அணி, ஒதுங்குவதற்கு சற்று மேடான இடத்தைத் தேடி குகைக்குள் பின்னோக்கிச் சென்றதாகத் அறியமுடிகின்றது . ஆனால், வெள்ளம் வேகமாக செல்வதும் ஆழமான, சிக்கலான பாதைகள் கொண்ட அந்தக் குகையில் சிக்கிக்கப்பட்ட அந்த சிறார்களை கண்டு கொள்வதோ அல்லது தேடுவதோ மிகவும் சவாலாக இருந்தது. இந்த விவரம் தொடர்பாக சர்வதேச கவனத்தை ஈர்த்தது . இங்கிலாந்து குகை மீட்பு குழு உட்பட , உலகின் பல நாடுகளை சேர்ந்த முக்குளிப்பு வீரர்கள், குகை மீட்பு வீரர்கள் மற்றும் இராணுவத்தினர்
மனிதாபிமான உதவிகள்
தாய்லாந்து நாட்டிற்கு உதவி கரம் நீட்டினார் . 9 நாள் கடுமையான போராட்டத்திற்கு பிறகு, யூலை 2 ம் தேதி இங்கிலாந்து மீட்பு வீரர்கள் சிறார்கள் மற்றும் அவர்களது பயிற்சியாளரும் குகை வாயில் இருந்து 4 கி.மீ. தூரத்தில் ஒரு பாறையின் இடையில் உயரமான பகுதில் பாதுகாப்பாகவும் உடல் சோர்வுடனும் மனதையிரியத்துடனும் இருப்பதாக கண்டுபிடித்தனர். இந்த குகை அமைப்பு ஒரு மலையின் அடிப்புறத்தில் அமைந்துள்ளது. அவர்கள் சிக்கியுள்ள மலையின் உச்சியில் இருந்து சிறுவர்கள் சிக்கியுள்ள இடம் ஏறத்தாழ ஒரு கிலோ மீற்றர் ஆழத்தில் இருந்தனர். சிறுவர்களோடு இங்கிலாந்து குகை மீட்பு வீரர்கள் நிகழ்த்திய உரையாடல் அடங்கிய விடியோ பதிவு ஒன்றும் அந்த நாட்டு அரசாங்கத்தால் வெளியிட்டு சர்வதேச ரீதியில் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தந்திருந்தது. எனினும், குகை பகுதியை வெள்ளம் சூழ்ந்திருப்பதால் சிறுவர்கள் நீரில் முக்குளிக்கக் கற்றுக் கொண்டு வெள்ளம் சூழ்ந்துள்ள குகையை நீந்தியே கடக்க வேண்டும் அல்லது வெள்ளம் குறைந்து செல்ல அண்ணளவாக 4 மாதங்களாவது குகையினுள் காத்திருக்க வேண்டும் என்று தாய்லாந்து இராணுவத்தினரால் கூறப்பட்டிருந்தது அப்போதுதான் மீட்புப் நடவாடிக்கை இயக்குவானது இல்லை இஎன்பதை உலகம் உணர்ந்திருக்கின்றது.குகையினுள் இருந்த தண்ணீரை அதிநவீன இயந்திரங்கள் கொண்டு இறைக்கு பணி மேற்கொள்ளப்பட்டது.
எடுக்கப்பட்ட முதல் நடவடிக்கைகள்
மறுபுறத்தில் குகையின் சிக்கிக் கொண்ட சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளருக்கு தேவையான உணவு, மருந்து, ஒடிஸிசன் நிரப்பட்ட குடுவைகள் ஆகியவை தேர்ச்சி பெற்ற முக்குளிக்கும் வீரர்கள் மேற்கொண்டனர் தொடர்ச்சியாக வழங்கிக்கொண்டிருந்தனர் . நான்கு மாதமும் இதேபோல் வழங்குவதாகவும் அவர்களை காத்திருக்கச் செய்யலாம் என்று தீர்மானிக்கப்பட்டது . இருப்பினும் ஒவ்வொரு முறையும் ஒரு மீட்புவீரர் குகைக்குள் சென்று திரும்புவதற்கு மிகவும் கடினமான, நிச்சயமற்றதாகவும், அதிக நேர பயணமாக இருந்தது. சிக்கிக் கொண்டவர்களும், குகையில் இருந்து குடும்பத்தினருக்கு எழுதப்பட்ட கடிதங்கள் மற்றும் உரையாடல் மனதை உருக்கின. தாய்லாந்தின் கடற்படை வீரர் தேர்ச்சி பெற்ற முக்குளிக்கும் வீரர் சமன் குனன் குகையில் சிக்கிய சிறுவர்களுக்கு ஓட்சிசன் குடுவையை கொடுத்து விட்டு மீண்டும் வரும்போது அவருக்கு ஓட்சிசன் முடித்தமையினால் யூலை 6-ம் உயிரிழந்தார்.
தாக்கத்தின் உச்சம்
இது அனைத்து மீட்புக் குழுவையும் அதிர்ச்சி அடைய சர்வதேசமும் மீட்பின் கடினத்தன்மையை விளங்கிக்கொண்டது அத்துடன்,திட்டமிட்டவாறே சில மாதங்கள் தாமதிப்பதானால் பாரிய சவாலை எதிர்நோக்க வேண்டியிருந்தது. இப்பிரதேசங்களில் தொடர்ந்து வருக்காலங்களில் கடுமையான மழை பொழிய வாய்ப்புள்ளதனால் குகை மேலும் வெள்ள உயர்மட்டத்திற்கு சென்றால் அபாயம் ஏற்படும் என்று மீட்புக் குழுக்கள் அஞ்சத்தொடங்கினர் .
ஆகையால் ஆபத்தான வழியாக இருப்பினும், பாதுகாப்பு உடையோடு வைத்து, மீட்பதற்கு தீர்மானிக்கப்பட்டது . குகையின் சில இடங்களில் 33 அடி உயரம் வரை இருந்தாலும், சில பகுதிகளில் மிகவும் குறைவானதாகவும் ஒடுக்கமானதாகவும் இருந்தது. ஒரு சிறிய பிரதேசம் மட்டும் 40 செ.மீ. அகலம் மட்டுமே உடையது. மீட்புப் வீரர்கள் தங்கள் ஓட்சிசன் குடுவையோடு நீந்திக் கடப்பது கடினம்.
எனவே, அவர்கள் அவற்றை கழற்றி கொண்டுதான் இடங்களைக் கடக்க முடியும். ஒவ்வொரு சிறுவரோடும் இரண்டு மீட்பு வீரர்கள் உடன் விதமாக மீட்பு திட்டமிடப்பட்டது. மீட்பு வீரர்களுக்கு செல்லும் பாதையை அறிய ஒரு கயிறு இணைக்கப்பட்டது . சிறார்களுக்கு முழு முகத்தையும் மூடும் கவசம் ஒரு ஓட்சிசன் குடுவை ஒரு மிதப்பு வீரர் சுமந்து வரும் வகையிலும், மீட்கப்படும் ஒரு சிறுவன் மற்றும் வீரர் கயிற்றால் இணைக்கப்பட்டிருப்பார்கள் எனவும் மீட்புப் பணி திட்டமிடப்பட்டது. இது போதிய பயிற்சி இல்லாத சிறுவர்கள் முக்குளித்து நீந்த உதவியாக இருக்கும். ஆனால் மீட்புப் பாதை என்பது வெறும் நீந்தும் வகையில் இல்லை . பாறைகள் ஏறுவது, சரிவில் நடப்பது போன்று செயற்பட வேண்டும் ‘சி’ என்ற இடத்தில் அடைந்த பின் ஓய்வெடுத்துவிட்டு நேராக வந்துவிடலாம். அந்த இடத்தில்தான் அதிகளவான மீட்புப்வீரைகள் முகாம் அமைத்திருந்தனர். குகைக்குள் சிறுவர்கள் சிக்கியுள்ள இடத்தில் காற்றில் 21 சதவீதம் ஒளியின் ஓட்சிசன் இருக்கவேண்டும். ஆனால், குகைக்குள் 15 சதவீதம் வரை ஓட்சிசன் அளவு குறைவாக காணப்படுகின்றது.
இக்கட்டான சூழ்நிலை
தொடர்ந்தும் திங்கட்கிழமை தொடங்கிய இரண்டாவது நாள் மீட்புப் பணியும் வெற்றிகரமாகவே தொடர்ந்தது. ஆனால், இரண்டாம் நாள் மீட்கப்பட்ட சிறுவர்கள் சற்று மயக்க நிலையில் காணப்பட்டாலும் அவர்கள் நலமும்டனேயே இருப்பதாக பின்னர் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் யாரையும் குடும்பத்தினரிடம் சந்திக்க முன்னர் அனுமதி வழங்கப்பட வில்லை .எனினும் சற்று சந்திக்க அனுமதி வழங்கப்பட்டது . மூன்றாம் நாள் மீட்புப் பணியை மேற்கொள்ள 19 தாய்லாந்து கப்பல் படை வீரர்கள் குகைக்குள் நுழைந்தனர். முதல் இரண்டு நாள்களைப் போல வேகமாக செயற்பட முடியாது என தெரிவிக்கப்பட்டது .மாறாக மிக விரைவாக மீட்புப் பணி வெற்றிகரமாக முடிந்தது. சிறுவர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளர் ஆகியோர் வெளியேறினர், பின்னர் தங்கியிருந்த மருத்துவர், கடற்படை வீரர்கள் உள்ளிட்ட நான்குபேர் கடைசியாக குகையை விட்டு வெளியேறினர்.
இணைப்புக்கள்
1.https://www.bbc.com/news/world-asia-44791998
2.https://edition.cnn.com/specials/asia/thailand-cave-rescue
3.https://www.news.com.au/world/asia/handcuffed-drugged-with-ketamine-truth-behind-thai-cave-rescue/news-story/172803c159e20de5cef5dee324266d30