Wednesday, December 18, 2024
Homeசிந்தனைகள்பொதுவான சிந்தனைகள்உங்கள் பிள்ளைகளுக்கு அவசியம் இதை சொல்லி கொடுங்க...

உங்கள் பிள்ளைகளுக்கு அவசியம் இதை சொல்லி கொடுங்க…

- Advertisement -

சிறுவர்களுக்கு சிறு வயதில் சொல்லிக்கொடுப்பதைதான், அவர்கள் காலம் முழுக்க பின்பற்றுவர். குழந்தைப் இளம்பருவத்தில் இருந்தே சில நல்ல விஷயங்களை சொல்லிக்கொடுக்க வேண்டும்.குழந்தைகளுக்கு சிறு வயதில் சொல்லிக்கொடுப்பதைதான், அவர்கள் காலம் முழுக்க பின்பற்றுவர். குழந்தைப் இளம்பருவத்தில் இருந்தே சில நல்ல விஷயங்களை சொல்லிக்கொடுக்க வேண்டும்.

- Advertisement -

உங்கள் பிள்ளைகளுக்கு அவசியம் இதை சொல்லி கொடுங்க... 1

பிளாஸ்டிக் பாவனையைத் தவிர்த்தல்

- Advertisement -

பிளாஸ்டிக் மற்றும் பெட் பாட்டில்களில் ரசாயனங்கள் வெளிப்பட்டு நீரில் கலக்கும். எனவே குழந்தைகளுக்கு இத்தகைய பாட்டில்களில் தண்ணீர் நிரப்பிக் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். அலுமினியம், எவர்சில்வரால் செய்யப்பட்ட தண்ணீர் பாட்டில்களை குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். முடிந்தவரை பிளாஸ்டிக் பயன்படுத்துவதைக் தவிர்க்க சொல்லித்தர வேண்டும்.பிளாஸ்டிக்கால் ஆன டிஃபன் பாக்ஸ் நல்லது அல்ல. சூடான உணவுப் பொருட்கள் பிளாஸ்டிக்குடன் வேதி வினையில் ஈடுபட்டு மோசமான வேதிப் பொருட்களை வெளியிடும். எவர்சில்வரில் செய்யப்பட்ட டிஃபன் பாக்ஸ் நல்லது. தற்போது, ஹோட்பேக் வசதிகொண்ட டிஃபன்பாக்ஸ்களும் கிடைக்கின்றன.

- Advertisement -

வானவில் உணவுப் பழக்கம்

பல்வேறு விதமான நிறங்கள் கொண்ட பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவது விளையாட்டிற்கு மட்டும் அல்ல. உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமே. உங்கள் குழந்தைகளுக்கு வானவில் உணவுகளைச் சாப்பிட பழக்குங்கள். அவை குழந்தைகளின் உடல் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

காலை உணவு

குழந்தைகளுக்கு காலை உணவை சரியான நேரத்தில் சாப்பிட பழக்கப்படுத்த வேண்டும். மேலும் குறைந்த கொழுப்பு உள்ள உணவுகளை சாப்பிட அறிவுறுத்தவேண்டும். குழந்தைகளுக்கு நொறுக்குதீனிக்கு பதிலாக முழு தானியங்கள் கொண்ட உணவுகளை சாப்பிட பழக்கப்படுத்த வேண்டும். இது அவர்களின் உடல் வளர்ச்சியை சிறப்பான அளவில் மேம்படுத்தும். காலை உணவுகளில் அதிக அளவு தானியங்களை சேர்த்துக்கொண்டால் நீரிழிவு மற்றும் இதய நோய் அபாயத்தை குறைக்க உதவும்.

விளையாட்டு

குழந்தைகளுக்கு பிடித்தமான விளையாட்டுகளை விளையாட அனுமதியுங்கள். இது அவர்களின் மனதை மகிழ்ச்சியுடன் வைத்திருக்கவும், உடல் வளர்ச்சியடைவும் உதவும். குழந்தைகளுக்கு நீச்சல், வில்வித்தை, மற்றும் ஜிம்னாஸ்டிக்ஸ் போன்ற பயிற்சிகளை சொல்லிகொடுங்கள்.

வாசிப்புத் திறன்

குழந்தைகளின் வாசிப்பு திறன் அவர்களின் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்துங்கள். உங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து வாசிப்பு திறனை அவர்களுக்கு சொல்லிகொடுங்கள்.

குழந்தை வளர்ப்பில் இந்த தவறுகளை செய்யாதீங்க

பெற்றோர் தங்களுடைய ம

சிறுவர் நேரம்

கள்/மகன் ஒழுக்க நெறியில் சிறந்தவராகவும், வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு இருக்க வேண்டுமென கருதுகின்றனர்.பொதுவாக எல்லா பெற்றோர்களும் தத்தம் குழந்தைகளுக்கு வளமான வாழ்க்கை அமைய வேண்டும் என்றுதான் நினைக்கின்றனர். மேலும், இவர்கள் தங்களுடைய குழந்தைகள், அவரவர் விருப்பமானவற்றைத் தேர்ந்து எடுத்துக் கொள்வதற்கான வாய்ப்புகளையும் உருவாக்கி தந்து, முக்கியமான தருணங்களில், அவர்களாகவே, தங்களுக்கு எது தேவை எது தேவையில்லை? என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும் என்பதையும் கற்றுத் தருகிறார்கள்.

மற்றொரு தரப்பு பெற்றோரோ, தங்களுடைய மகள்/மகன் ஒழுக்க நெறியில் சிறந்தவராகவும், வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு இருக்க வேண்டுமென கருதுகின்றனர்.இதற்காக, இவ்வகை பெற்றோர் தங்களுடைய வாரிசுகளிடம், கண்டிப்பு மிக்கவராக நடந்து கொள்கின்றனர். இரண்டு தரப்பு பெற்றோரும்/குடும்பத்தினரும் தத்தம் குழந்தைகளை வளர்த்தெடுப்பதன் பின்னணியில், தனித்தனி பாணிகளைக் கையாண்டாலும் ஒருவிதத்தில் இணைந்துப் போகத்தான் செய்கின்றனர்.

எந்தவொரு பெற்றோரும் குழந்தைகளுடன் விளையாடியும், கதைகள் சொல்லியும் பொழுதைப் போக்கவே விரும்புகின்றனர். ஆனால், துரதிஷ்டவசமாக, பெற்றோர் இருவருக்கும் வீட்டில் குறைவான ஓய்வு நேரமே கிடைக்கிறது. இத்தகைய சூழலில், குழந்தை விளையாடுகிற நேரங்களில் பெற்றோர் தங்களது பணிகளைச் செய்து கொள்வது வாடிக்கை ஆகிவிட்டால் ஏற்கனவே, வளரத் தொடங்கிய குழந்தை தனது வாழ்க்கையைத் தானே தீர்மானிக்க ஆரம்பிக்கிறது. கடந்துபோன மணித்துளிகளை மீட்டெடுக்க எந்தவொரு வழியும் கிடையாது.எனவே, மென்மையான அரவணைப்பு, தலையை வருடிக் கொடுத்தல் என உடலளவில் குழந்தையோடு நெருக்கமாக இருக்க முயற்சி செய்யாமல், மனதளவிலும் நெருங்கி இருங்கள். அப்போதுதான் நீங்கள் சேர்ந்து இருக்கும் பொழுதுகளை ரசித்து அனுபவிக்க முடியும்.

அரவணைக்காமல் இருத்தல் ஒருவரையொருவர் அன்னியோன்யமாக ஆரக் கட்டித்தழுவி அரவணைத்துக் கொள்வதால், மனது மற்றும் உடல் ஆரோக்கியத்துக்குப் பலவிதமான நன்மைகள் கிட்டுகின்றன என அறிவியலாளர்கள், அரவணைப்பின் முக்கியத்துவத்தை நிரூபித்து உள்ளனர். கட்டித்தழுவிக்கொள்வதால் வெளிப்படையாக ஏராளமான பயன்கள் உண்டாகின்றன. ஒருவேளை, நீங்கள் உங்கள் குழந்தையை அரவணைப்பது இனிய அனுபவம் என ஏற்றுக்கொள்ளலாம்.

தங்க நிமிடங்களைத் தவற விடுதல் ‘நீங்கள் சிறந்த பெற்றோர்’ என்ற பெயர் எடுப்பதற்கு, உங்களுடைய வாரிசுகளின் பால்ய காலங்களைப் புகைப்படமாகவோ, வீடியோவாகவோ எடுத்து வைப்பது உதவும் என்று சொல்லப்படுகிறது. ஒருவேளை, இவ்வாறு நீங்கள் செய்யாமல் விடுவதால் அது உங்களுடைய மழலைகளின் மன வலிமை, நல்ல பழக்க வழக்கங்கள் அல்லது உடல் நலத்தை எந்த விதத்திலும் பாதிப்புக்கு உள்ளாக்காது.

குழந்தை வளர்ப்பில் அனுபவம் உள்ள பெற்றோர், தத்தம் வாரிசுகளின் திறமைகளை கவனிக்காமல் இருந்ததற்கு வருத்தம் கொள்வார்கள். இருப்பினும், ஒரு சில திறமைகள் மிகச்சிறு வயதிலேயே கண்காணிக்கப்படும்போது, குழந்தைகள் புதுப்புது விளையாட்டுக்களில் ஈடுபடுவதை முயற்சி செய்வார்கள்; மேலும், குறுகிய காலத்துக்குள் வாசிக்கவும் செய்வார்கள்.

பாதுகாப்பான பொம்மைகள்…

குழந்தைகளுக்கு பாதுகாப்பான பொம்மைகளை வாங்கி தருவது முக்கியம். எது பாதுகாப்பானது? எதை வாங்கி தரலாம் என இங்கு பார்க்கலாம்.

சிறுவர் நேரம்

குழந்தைகளுக்கு பாதுகாப்பான பொம்மைகளை வாங்கி தருவது முக்கியம். குழந்தைகளின் வாழ்வில் சில காலத்துக்கு நாயகர்களாக இருப்பது அவர்களின் பொம்மைகள்தான். வயதுக்கு ஏற்ற படி நிறைய பொம்மைகள் கிடைக்கின்றன. எது பாதுகாப்பானது? எதை வாங்கி தரலாம் என இங்கு பார்க்கலாம்.

முதல் ஆறு மாதம் வரை குழந்தைகள் தங்களிடம் நெருங்கும் நபர்களைத்தான் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.அவர்களின் கண்களைத்தான் அதிகமாக குழந்தைகள் பார்ப்பார்கள். முகம், கண், கைகள் அசைவு, பளிச் நிற உடைகள் ஆகியவற்றை பார்ப்பார்கள்.

கைகளில் பிடித்துக்கொள்ள ஏற்றதாக இருப்பதை, குழந்தைகள் வாயில் வைத்து சப்புவார்கள் என்பதால் பெரிய பொம்மைகளாக வாங்கி கொடுக்கலாம். சத்தம் வரக்கூடிய பொம்மைகளை வாங்கி தரலாம். பெரிய ரிங், ராட்டில்ஸ், ஸ்குவீஸ் டாய்ஸ், டீத்திங் டாய்ஸ், சாஃப்ட் டால்ஸ், டெக்ஸ்சர் பால்ஸ், வினைல், போர்ட் புக்ஸ் போன்றவை வாங்கி கொடுக்கலாம்.

ரைம்ஸ் உள்ள சிடி போடுவது, சின்ன சின்ன மியூசிக் சிடி, தூங்க வைக்கின்ற தாலாட்டு பாடல்கள் போன்றவை வாங்கி ஒலிக்க செய்யலாம். சிறிய பொருட்களை வாங்கி தர கூடாது. வாயில் வைத்து விழுங்கும் அபாயம் உள்ளது.

1 வயது வரை குழந்தைகள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு நகர கூடியவர்கள். உட்காருவது, புரள்வது, தவழ்வது, நிற்பது, நடப்பது, கத்துவது, அழுவது, இழுப்பது போன்றவற்றை செய்வார்கள்.தண்ணீர் டாய்ஸ், சக்கரம் உள்ள மரக்கட்டை பொம்மைகள், பிளாஸ்டிக் பொம்மைகள், பப்பட்ஸ், பெரிய பந்து, பெரிய சாஃப்ட் பிளாக்ஸ், கட்டையால் ஆன சதுரங்கள், தவழ்ந்து வரும் பொம்மைகள், எடை இல்லாத பொம்மைகள் வாங்கி கொடுக்கலாம்.

முன்பு பயன்படுத்திய மரத்தால் தயாரித்த நடை வண்டி வாங்கி கொடுக்கலாம். வாக்கர் தவிர்க்கவும்.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.