தந்தங்களுக்கான வேட்டையாடப்படுதல் மற்றும் வாழ்விட இழப்பு காரணமாக பல தசாப்தங்களாக யானைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால், ஆப்பிரிக்க காட்டு யானை (லோக்சோடோன்டா சைக்ளோடிஸ்) மற்றும் ஆப்பிரிக்க சவன்னா யானை (லோக்சோடோன்டா ஆப்பிரிக்கா) இப்போது ஆபத்தான விளிம்பில் இருப்பதாகவும், இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IUCN) சிவப்பு பட்டியலில் ஆபத்தான உயிரினங்களாக பட்டியலிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஆப்பிரிக்க யானைகள் ஒற்றை எண்ணிக்கை இனமாக கருத்தப்பட்டுள்ளதாகவும், அவை பாதிக்கப்படக்கூடியவை என பட்டியலிடப்பட்டுள்ளன என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய மரபணு சான்றுகள் தோன்றியதைத் தொடர்ந்து, ஐ.யூ.சி.என் சிவப்பு பட்டியலில் இரண்டு இனங்களும் தனித்தனியாக மதிப்பீடு செய்யப்படுவது இதுவே முதல் முறை ஆகும். அதன்படி, சவன்னா யானை மற்றும் வன யானை ஆகிய இரண்டும் இப்போது ஆபத்தில் உள்ளன. உண்மையில் ஆப்பிரிக்க யானைகளில் இரண்டு இனங்கள் உள்ளன என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.
ஆப்பிரிக்காவில் உள்ள யானைகள் சுற்றுச்சூழல் அமைப்புகள், பொருளாதாரங்கள் போன்ற விஷயங்களில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால் தற்போது வெளியாகியுள்ள ஆப்பிரிக்க யானை இனங்களின் புதிய ஐ.யூ.சி.என் ரெட் லிஸ்ட் மதிப்பீடுகள் சின்னச் சின்ன வன விலங்குகள் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான அழுத்தங்களை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. இதுகுறித்து ஐ.யூ.சி.என் இயக்குநர் ஜெனரல் டாக்டர் புருனோ ஓபர்லே கூறியதாவது, “நாம் விலங்கினங்களை வேட்டையாடுவதை நிறுத்த வேண்டும் மற்றும் வன, சவன்னா யானைகளுக்கு போதுமான பொருத்தமான வாழ்விடங்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
இருப்பினும் பல ஆப்பிரிக்க நாடுகள் சமீபத்திய ஆண்டுகளில், யானை வீழ்ச்சியை மாற்றியமைக்க முடியும் என்பதை நிரூபித்து வருகின்றன. அவற்றின் முன்மாதிரியைப் பின்பற்றுவதை உறுதிப்படுத்த நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என்று கூறியுள்ளார். சமீபத்திய மதிப்பீடுகள், ஆப்பிரிக்க கண்டம் முழுவதும் யானைகளின் எண்ணிக்கையில் பரந்த அளவிலான சரிவை எடுத்துக்காட்டுகின்றன.
கடந்த 31 ஆண்டுகளில் ஆபிரிக்க வன யானைகளின் எண்ணிக்கை 86% க்கும் அதிகமாக குறைந்துள்ளது என்றும் ஆப்பிரிக்க சவன்னா இன யானைகளின் எண்ணிக்கை கடந்த 50 ஆண்டுகளில் குறைந்தது 60% குறைந்துள்ளது என்று மதிப்பீடுகள் மூலம் தெரியவந்துள்ளது. வேட்டையாடுதலில் கணிசமான அதிகரிப்பு காரணமாக 2008ம் ஆண்டிலிருந்து இரு உயிரினங்களும் கூர்மையான சரிவை சந்தித்தன. இருப்பினும் 2011ல் இரு இனங்களிலும் சற்று அதிகரிப்பு காணப்பட்டது.
Also read… இந்தியா – இங்கிலாந்து ஒருநாள் மேட்சை பார்க்க பயங்கர ரிஸ்க் எடுத்த சச்சினின் தீவிர ரசிகர்!
அதிலும் குறிப்பாக யானைகளின் வாழ்விடங்களை, விவசாய மற்றும் பிற நிலப் பயன்பாடுகளுக்கு மாற்றுவது மற்றொரு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலாக அமைந்துள்ளன. 2016 ஐ.யூ.சி.என் ஆப்பிரிக்க யானை நிலை அறிக்கையில், இரண்டு இனங்களின் எண்ணிக்கையும் சேர்த்து ஆப்பிரிக்க கண்டத்தில் மொத்தம் 415,000 யானைகள் மட்டுமே வசிப்பதாக கூறப்படுகிறது. விலங்கினத்தின் வாழ்வியலை கருத்தில் கொண்டு கிழக்கு ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் தற்போது யானைகள் வேட்டையாடப்படுவது குறிப்பிடத்தக்க அளவில் குறைந்து விட்டதாக கூறப்படுகின்றன. ஆனால் மற்ற பிராந்தியங்களில் வேட்டையாடுதல் பெரிதும் குறையவில்லை. மத்திய மற்றும் மேற்கு ஆபிரிக்காவில் விலங்கினங்கள் வேட்டையாடப்படுவது உண்மையில் மோசமடைந்துள்ளது.
இந்த நிலை இப்படியே நீடித்தால் இந்த வகை இனங்கள் உயிர்வாழ வாய்ப்பில்லை என்றும் ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதன்பின் ஆப்பிரிக்க யானை இனங்கள் அரியவகை விலங்காக மாறும் அவலம் ஏற்படும். பொதுவாக சவன்னா யானை துணை சஹாரா ஆப்பிரிக்காவின் சமவெளிகளில் காணப்படுகின்றன. காட்டு யானைகள் மத்திய மற்றும் மேற்கு ஆபிரிக்க காடுகளில் காணப்படுகின்றன. இவை இரண்டும் ஆபத்தான நிலையில் உள்ளன என்ற முடிவுக்கு விஞ்ஞானிகள் காட்டு யானைகள் மிகவும் அபாயகரமான நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.