Wednesday, November 27, 2024
Homeகல்விபொது அறிவு - உளச்சார்புஉலக மரபுரிமையாக இலங்கையின் கண்டி எசல பெரஹராவை பெயரிட ஆலோசனை

உலக மரபுரிமையாக இலங்கையின் கண்டி எசல பெரஹராவை பெயரிட ஆலோசனை

- Advertisement -
kandy perahera srilanka
kandy perahera srilanka

கண்டி தலதா மாளிகையின் எசல பெரஹராவை உலக மரபுரிமையாக பெயரிட ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக UNESCO வின் இலங்கை காரியாலயம் தெரிவித்துள்ளது.

- Advertisement -

அருவமான மரபுரிமை என அதற்கு பெயரிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஆலோசனையை பாரிஸில் அமைந்துள்ள UNESCO அமைப்பின் தலைமையகத்தில் முன்வைக்க திட்டமிட்டுள்ளதாக பொதுச்செயலாளர் பேராசியர் புஞ்சி நிலமே மீகஸ்தென்ன தெரிவித்துள்ளார்.

- Advertisement -
esala perahera
esala perahera

இதனைத் தவிர, நாட்டில் முதலாவதாக அமைக்கப்பட்டதாகக் கூறப்படும் அபய வாவி எனப்படும் வசப குளத்தை உலக மரபுரிமையாக பெயரிட நீர்ப்பாசன அமைச்சு ஆலோசனையை முன்வைத்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில்,சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்களில் எல்லங்கா வாவி அமைப்பு மற்றும் ராஜகல தொல்பொருள் தளம் உலக பாரம்பரிய தலங்களாக நியமிக்க உள்ளடக்கப்பட்டுள்ளன.

அடுத்த மாதம் 24 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள செயலமர்வில் தொல்பொருள் மற்றும் கலாசாரத் துறையைச் சேர்ந்த 24 பேராசிரியர்களுடன் கலந்தாலோசித்து இதற்கான திட்டம் தயாரிக்கப்படுமென பேராசிரியர் புஞ்சி நிலமே மீகஸ்தென்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.