Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the rank-math domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/kidhou5/public_html/wp-includes/functions.php on line 6114
நடனக் கலை கட்டுரை #dance essay #history of dance#dance - சிறுவர்களுக்கான அறிவுத்திறன் வளர்ச்சிக்குரிய வழிகாட்டல்கள்
Wednesday, November 27, 2024
Homeகல்விகட்டுரைநடனக் கலை கட்டுரை #dance essay #history of dance#dance

நடனக் கலை கட்டுரை #dance essay #history of dance#dance

- Advertisement -

பரத நாட்டியம் என்ற பெயரில் உலகப் புகழ் ஈட்டி வரும் ஆடற்கலை, தமிழ் மண்ணில் உருவாகியது. பல நூறு ஆண்டுகளுக்கு முன் வளப்படுத்தப்பட்ட மரபுக்கலை இது. கால ஓட்டத்தில் பல பெயர்களால் அழைக்கப்பட்டது.தற்போது பாவம், ராகம், தாளம், ஆகிய மூன்றும் இணைந்த ஆடற்கலை என்று பொருள்படும் “பரத நாட்டியம்” என்ற பெயரால் வழங்கப்படுகிறது.

- Advertisement -

விண்ணும் மண்ணும் நடனச்சாலையாக இருக்கின்றன சுற்றிலும் இடைவிடாமல் நடனக்காட்சிகள் நடக்கின்றன. இக்காட்சிகளைக் காணக்காண உள்ளம் பூரிக்கிறது. இரவின் கருந்திரையைப் பிளந்து கொண்டு கம்பிமின்னல் வரும் ஒய்யாரத்தைப் பாருங்கள். மேகமார்பை ஊடுருவிப் பாய்ந்து பாய்ந்து பளிச்சிட்டு நடனம்புரியும் மின்னலை இரவெல்லாம் பார்த்துப் பார்த்துப் பரவசமாகாத கவி உள்ளமில்லை! மின்னற்கொடியின் நடனத்துடன் மேககர்ச்சனையும் சேர்ந்துவிட்டால், அந்த இன்பத்தைச் சொல்லால் அளக்கமுடியாது! சூரியன் குபுக்கென்று கிழக்கே ஒரு குதிகுதித்தெழுந்து, சாந்த நடனம் புரிந்து, மற்றொரு குதி குதித்துத் தணல்மயமாக மேற்கே மறையும் காட்சியைக்கண்டு நம் உள்ளம் இன்பக் கூத்தாடுகிறது! காற்றுப் பாட்டை வரவேற்று, அதனுடன் கூடிக்குழைந்து குலாவி நடனம்புரியும் மரஞ்செடி கொடிகளைப் பாருங்கள்! காற்றின் வேகத்திற்குத் தக்கபடி பூவும் இலையும் அசைவதைப் பாருங்கள்! இலைகள், முத்திரை காட்டுவது போலவும், காற்று, வீணையை மீட்டும் விரல்கள் போலவுங் காண்கின்றன! மலையிலிருந்து அருவி தடதடவென்று படிகத்தை உருக்கிவிட்டதுபோல் ஆனந்த நடனமாடி வருவதைப் பார்த்தால், நம் உள்ளமும் ஆனந்தக் கூத்தாடும். ஆறு, மேட்டிலும் பள்ளத்திலும் ஜதிமிதித்துச் சென்று, எல்லையற்ற கடலுடன் சேர்ந்து, அலைகளுடன் அலையாக நடனம்புரியும் பிரம்மானந்தக் காட்சியைப் பாருங்கள்! ஆ, கடலின் அகண்ட கீதமும், ஆவேச நடனமும் கண்ணுள்ள மட்டும் பார்த்துக்கொண்டேயிருக்கலாம்; காதுள்ள மட்டும் கேட்டுக்கொண்டே யிருக்கலாம்! உலக வாழ்வே நடனந்தான்!

tamil_kids_dance
nadanakalai

எல்லா வுயிர்களும் இன்பம் வந்தால் துள்ளிக் குதிக்கின்றன; துன்பம் வந்தாலும் சோக நடனமாடுகின்றன. விருப்புவெறுப்பு, இன்பம் இடர், கசப்பு களிப்பு முதலிய எந்தத் தன்மையும் ஒரு முகக்குறியால், கைக்குறியால், இடுப்பு வளைவால், அங்க அசைவால் நமக்குப் புலனாகின்றது. பேச்சுடன் கைவீச்சும் கால்வீச்சும் முகச்சுளிப்புகளும் இளிப்புகளும் களிப்புகளும் சேர்ந்துதான் உள்ளக்கருத்தை உணர்த்துகின்றன, உயிரே, நமது உள்ளத்தில் ‘பட் பட்’டென்று நடனம்புரிந்து கொண்டிருக்கிறது. இரத்த நாடிகளெல்லாம் ‘ட்ப் ட்ப்’ என்று நடனம் புரிகின்றன. இந்த நடனம் நின்றால், மனிதர் வாழ முடியாது. ஜடயந்திரங்களும் ‘ஓம்’ என்று சத்தமிட்டுச் சக்கரஞ்சுற்றி, மின்சாரத்தாலும் ஆவியாலும் நடனம் செய்கின்றன. படச்சுருளை ஓட்டும் மின்சாரப் பொறியை பாருங்கள்! ஒரு சுரங்கத்தில் தங்கங்காய்ச்சும் பெரிய யந்திரங்களின் தாண்டவத்தைப் பாருங்கள்! எந்த யந்திரமும் நடனமாடிக்கொண்டுதான் வேலைசெய்கிறது. இந்தச் சீவயந்திரத்தின் விசை இதயத்தில் நடக்கும் திருவடி நடனமே!

- Advertisement -
tamil_kids_dance
nadanakalai

மனிதன் பேசத்தெரியுமுன்பே முகக்குறி கைக்குறிகளாலும், உறுப்பசைவுகளாலும் தன் உணர்ச்சியையும் கருத்தையும் வெளியிட்டான், ஆதலால், மொழிக்கும் இசைக்கும் முன்பே நடனம் இருந்தது. மொழியும் இசையும் சேர்ந்து நடனகலைக்கு ஒரு வடிவ மீந்தன. சொல்லிற்கேற்ற கைக்குறி கண்குறிகளும், சொல்லாலான இசைகளுக்கேற்ற ஆட்டங்களும் இயற்கையாகவே உண்டாயின. இசைக்கேற்றபடி இராகதாளங்கள் உண்டாயின. இராகதாளங்களுக்கு, முதலில் குரலும் கைகளும் பயனாயின. பிறகு, மனித அறிவும் சுவையும் முதிர முதிரப் புதிய புதிய இசைக்கருவிகளும் ஆடல்பாடல்களின் முறை வகுப்புகளும் அபிநயலட்சணங்களும் எழுந்தன. யாழ், குழல், முழவு முதலிய கருவிகள் மனிதக்குரலை இன்புறுத்தித் துணைசெய்தன. இவ்வாறே இயற்கையான நடனம், பல கலைநுணுக்கங்களுடன் வளர்ந்து ஒரு சாத்திரமானது. தகுந்த அருட்புலவர் அதற்கு இலக்கணமும் இலக்கியங்களும் வகுத்தனர். இதுதான் நடனக்கலையின் இயற்கையான வரலாறாகும்.
வாழ்வே, ஒரு நாட்டியக் கலைதான்: மனித உணர்ச்சிதான் மூளையில் அறிவாகவும், நாவில் பேச்சாகவும், வாக்கில் கவியாகவும் குரலில் பாட்டாகவும், விரலில் கருவியிசையாகவும் நடனம் புரிகிறது. உணர்ச்சிதான் முகபாவனைகளாலும், தலை, மார்பு, கைகள், இடுப்பு, கால்கள், அங்கங்களாலும் அபிநயமும் கலந்தே வருகிறது. பேச்சில்லாமல் சாடையாலேயே உணர்ச்சியை வெளிப்படுத்துகிறோம். ஒருவன் மனதை முகக்குறியும் கைக்குறியும் காட்டும். ‘ஹா, என்ன வியப்பு …அப்பா காரியம் ஒரு வழியாக முடிந்தது. என் இன்பமே வா, வா! என் கண்ணே சாப்பிடு!… ஐயோ, என்கதி இப்படியானதே! ஹா, புலி புலி! பாம்பு பாம்பு! சை, இதென்ன உலகம்! என்ன மனிதன், எல்லாம் அவ்வளவுதான்! விடு கழுதையை! அட மோசக்காரா, இப்படியா செய்தாய்!… நன்றாக வேண்டும், படு, படு!…ஹ…ஹ…ஹ, சிரிப்புத்தான் !… பூசையிலே கரடி ஓட்டுவதுபோல வந்தான்… ஓடு ஓடு, நாழியாயிற்று! இதென்னடீ இந்த மனிதர் அதிசயம்; நன்றாயிருக்கிறதம்மா!… இப்படித்தானுண்டோ? எனக்குப் பிடிக்கவேயில்லை! நாதா நாம் அன்றில்போலிருப்போம்…ஹா, ப்ராணநாதா!’ இந்த உணர்ச்சித் தொடர்களை ஒரு கண்ணாடிமுன் பேசிப்பாருங்கள்! பேச்சுக்கேற்ற அபிநயம் தானே வரும். பேசக்கூடத் தேவையில்லை; ஒருவன் தலையில் கைவைத்து முகத்தைக் கோணும்போது, கையை விரிக்கும்போது, அவன் உள்ளம், ‘ஐயோ, இப்படிவந்ததே’ என்ற சோகத்தை விளக்கும். இரண்டு காதலர் இரண்டு கைகளையும் அகல விரிக்கும்போது, ‘நீயே என் ஆவி; உன்னை என் உயிரில் அணைத்து கொள்வதே இன்பம்!” என்று மனம் அவருள்ளே பேசும். இப்படி இயற்கையாக வருவதே உண்மையான நாட்டியமாகும். அதில் சுருதியும் பாட்டும் போலவே, பேச்சும் அபி நயமும் பொருந்தியிருக்கும்.

- Advertisement -
tamil_kids_dance
nadanakalai

நீண்டகாலமாக உலகில் இந்த அபிநய பாஷைதான் வழங்கிவந்தது. இன்னும் சில ஜாதியாரிடையே சைக்கினைதான் உள்ளுண்ர்வை வெளியிடுகிறது. தமிழே அறிந்த ஒருவன். தமிழே அறியாத ஒரு இந்திவாலாவுடன் பேசுவதானால் மொழி பயனாவதில்லை; கைச்சாடையுடம் முகக்குறிகளுமே பயனாகும். அபிநயம், ‘பேசா உலகமொழியாக’ வழங்குகிறது. அதை மனிதசமுதாயம் நன்றாக உணர்ந்தால் எவரும் எவருடனும் பாஷை தெரியாமலே கைக்குறிகளாலும் கரணங்களாலும் முகச்சுளிப்புகளாலும் நன்றாகப் பேசலாம். “கானா காலியா;” என்று பேசத்தெரியாத ஒரு தமிழன், நம் இந்தியாவைப்பார்த்து பத்மகோச முத்திரையாக வலக்கை விரல்களை மடக்கி, வாய்க்கருகே வைத்து சாடை காட்டினால், உடனே இந்திவாலா, “காலியா” என்று பதிற்சொல்லுவான். ‘அவன் வயிறு காலியில்லை, நிரம்பிவிட்டது’ என்று நாமும் அறிவோம், அல்லது, அவன் ஆம் என்று தலையை அசைத்து வயிற்றைக்காட்டினாலும் போதும். பசித்தவன் வலக்கையால் எக்கிய வயிற்றைக்காட்டி முகஞ்சோர்ந்தாலே. அவன் பசி மிகுந்தவன் என்றறிவோம். காதலர் மனத்தந்தியை முகக்குறிகளாலும் கண்குறிகளாலும் கைச்சாடைகளாலும் அனுப்பி உட்கலப்பெய்துகின்றனர். அவள் ஏழாம் மாடிமேல் நின்றாலும், இவன் முச்சந்திப் புழுதியில் இருந்தாலும், கண்பார்வையாலும் உதட்டு மடிப்புகளாலும் காதல் தந்தி பறந்துபோகிறது; கையும் சேர்ந்துவிட்டால், தந்தியின் வேகத்திற்குக்கேட்க வேண்டியதில்லை! இப்படி இயல்பாக நமது மனித வாழ்வில், ஏன் விலங்கு வாழ்விலே கூட, அபிநய பாஷைதான் முதன்மையாக உணர்ச்சியறியும் சாதனமாயிருக்கிறது.

வாழ்வை இயக்கும் இந்த அபிநய பாஷையை உலகெங்கும், உலகில் உள்ள எல்லா நாட்டினரும் போற்றி வளர்க்கின்றனர். ஒவ்வொரு நாட்டினரும் நாட்டியக்கலையில் அளவற்ற உற்சாகங்கொண்டிருக்கிறார்கள். மனிதவாழ்வின் இன்பச் சிகரத்தில் நாட்டியக் கலைவாணி உலாவுகிறாள். எழுத்தறிவில்லாமல், மொழிவளர்ச்சியில்லாமல், தற்கால நாகரிகத்தை எட்டிப்பாராமல், பிறந்தமேனிக்குத் திரியும் ஆஃப்ரிக்கக் காட்டு மக்களிடையே கூட்டமாகவும் தனித்தும் ஆடிக்களிக்கும் நடனக்கலை விளங்குகிறது. ஆஃப்ரிக்காவில் ஜூலுக்களும் (zulus) ஹாடென்டாட்டுகளு (hottentots) பரவசமாக ஆடிக்களிக்கின்றனர். அவர்கள் வேட்டையாடுவது ஒரு நடனமே. வேட்டைப் பொருளை உண்டுகளித்துக் கைகோத்துக் கூத்தாடுவதும் களிநடனமே. ஆஸ்திரேலியக் காட்டிலும் வனாந்திரத்திலும் வசிக்கும் பழங்குடிமக்களிடையே, கவர்ச்சியான நடனம் உண்டு. ஜாவா மக்களிடையே அற்புதமான நடனக்கலை வளர்ச்சிபெற்றிருக்கிறது. பர்மியருக்கு உற்சாகமளிப்பது நடனம்.

tamil_kids_dance
nadanakalai

ஜப்பானியர் தமது நடனக்கலையை அபாரமாக வளர்த்திருக்கிறார்கள். சீனருக்கு நடனம் நாடகம் என்றால் கொண்டாட்டந்தான். பாரசீகர் பாட்டிலும் நாட்டியத்திலும் சொக்குகின்றனர். ஐரோப்பியரைப்பற்றிக் கேட்கவேண்டியதில்லை; வெள்ளையர் கலைமுறையில் நடனம் ஒரு சமுதாயத் தேவையாயிருக்கிறது. ஐரோப்பியர் சண்டையிலும் சமாதானத்திலும் ஆண்பெண் கைகோத்து நடம்புரிகின்றனர். பாட்டும், கொட்டும், விருந்தும், கூட்டமும் சேர்ந்து அவர்கள் கால்களையும் கைகளையும் அசைத்து நடிக்க உற்சாகப்படுத்துகின்றன. பால் (ball-dance) என்னும். கேளிக்கை, பலவகையான கலை நடனங்கள் – எல்லாம் ஐரோப்பியரிடையே முறையாக வளர்ச்சி பெற்றிருக்கின்றன. ஆனால், நாட்டியக்கலையின் உபிரையும், பயனையும், உயர்ந்த இலட்சியத்தையும் கண்டு போற்றியது நமது தமிழலே.

 

*********************************

kidhours-upcoming

covid19_update #kids songs,#kids health,#siruvar neram,kids songs,siruvar seithigal,siruvar vilaiyattu,siruvar kalvi, world tamil news,tamil first news,tamils,raasi palan,tamil cinema,new tamil movies,vijay sethupathi movies,latest tamil movies,action tamil movie,new tamil movies 2020,new tamil movies released,tamil new film,film tamil,online movies tamil,tamil,english to tamil,english to tamil translation,tamil translation,english to tamil dictionary,tamil typing,hindi to tamil,english to tamil typing
english to tamil sentence translation online,google tamil typing,tamil dictionary,hindi to,tamil translation,tamil to english translator app,sinhala to tamil,tamil to english translation sentences,jothidam,tamil jathagam,tamil jathagam online,daily thanthi jothidam
nadi jothidam,josiyam in tamil,tamil jathagam online free,tamil jothidam online
online josiyam tamil,kulanthai pirappu jothidam in tamil#Insurance #Gas#Electricity#Loans#Mortgage#Attorney#Lawyer#Donate#Conference Call
Degree#Credit

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.