Thursday, December 12, 2024
Homeபெற்றோர்கருத்துக்கள்உலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா...?

உலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா…?

- Advertisement -
world-flags-kidhours
world-flags-kidhours

தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்…

- Advertisement -

தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழுதவர்கள் இங்கே ஆயிரம் பேர்….குழந்தையின் அழுகையை டெலிபோனில் மனதால் அழுதபடி கேட்டவர்கள் லட்சம் பேர்… தலையனையை தாயின் மடியாக நினைத்து கண்ணீர் விட்டவர்கள்……… எத்தனை பேர்?

இன்னக்கி வெளிநாட்ல வேலை பார்பது ஒரு பேஷன்.வெளிநாட்ல வேலை பார்த்தால் திருமணத்திற்கு பெண் குடுப்பதற்க்கு நீ,நான் என போட்டி போடுவாங்க,இந்தியாவை விட சம்பாத்தியம் அதிகம்,ஊருல வந்து இருக்குற ஒன்று அல்லது இரண்டு மாதத்தில் நல்ல மரியாதை, குறிப்பா நம்முடைய ஸ்டேடஸ் அதிகரிக்குது இதெல்லாம் தான் வெளிநாட்டில் நம்மை கட்டி போடும் காரணங்கள்.சரி வெளிநாட்டில் வேலை பார்பது உண்மையில் இங்கு இருப்பவர்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கின்றதா?நாம எல்லாம் இங்கே உண்மையில் சந்தோஷமாகதான் இருக்கின்றோமா? கொஞ்சம் யோசித்து பார்த்தால் பெரும்பாலானவர்களின் பதில் இல்லை என்பதே!!!

- Advertisement -

 

- Advertisement -
migrants-kidhours
migrants-kidhours

 

அப்ப ஏன் இங்கே இருக்கின்றோம்? வேறு வழி இல்லை என்பதாலா? அல்லது வேறு வழி தெரியவில்லை என்பதாலா? அல்லது நாட்டில் உள்ள வருமானம் பத்தவில்லை என்பதாலா? அல்லது இவை எல்லாம் சேர்ந்ததுதானா?

வெளிநாட்டு வாழ்க்கை என்பது சிகரெட்டுக்கு அடிமையாவதை போன்றது. ஒருமுறை சுவைத்து பார்போம் என நினைத்து சிகரெட்டை சுவைக்க ஆரம்பித்து அதில் அடிமையாவதை போல!!! இரண்டு வருடம் மட்டும் அல்லது ஐந்து வருடம் மட்டும் என நினைத்து இங்கே வந்து கால சக்கரத்தில் சிக்கி,நசுங்கி, அதிலிருந்து மீள முடியாமல் நமது இளமையை தொலைத்தபிறகு நம்மை நாமே தொலைத்து விடுகின்றோம் அந்த சிகரெட்டை போல!!!

இதற்க்கு விடிவே கிடையாதா?நாம் இதிலிருந்து தப்பிக்க முடியாதா? என ஏங்குபவர்கள் இலட்சம் பேர்கள் வெளிநாட்டில் உண்டு என்பது எனக்கு தெரியும்.

இதற்கு யார் காரணம்? நம்முடைய சமுதாயமா? நமது குடும்பத்தார்களா? அல்லது
நாமா?
இதை வைத்து ஒரு பட்டி மன்றம் கூட நடத்த முடியும் அனால் இதற்கான தீர்வு காண ஒரு சாலமன் பாப்பையாவோ அல்லது திண்டுக்கல் லியோனியோ பத்தாது.

 

இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்னே ஒன்றும் இல்லாத நாடுகள் எல்லாம் இப்போழுது நம்மை வைத்து வேலை வாங்குகின்றன.ஆனால் நாம் இன்னும் அடுத்தவர்களுக்கு வேலை பார்த்து கொண்டுதான் இருக்கின்றோம்.காரணம் என்ன? நம்நாட்டில் வேலை இல்லை… அல்லது சம்பளம் கம்மி…என்பது தானே?

 

உண்மைதான் ஆனால் நம்நாட்டில் உங்களைவிட அதிகம் சம்பாதிபவர் இல்லை என உங்களால் கூற முடியுமா?உங்கள் ஊரில் உள்ள முக்கியஸ்தகர்களை பார்த்தால் நிச்சயமாக 70% உள்நாட்டில் சம்பாதித்தவர்கள்தான் என்பதை நீங்கள் என்றாவது யோசித்தீர்களா?

 

நாட்டு பிரச்சனைக்கு போனால் அது பெரிய பதிவாகிவிடும். அதனால் நம் பிரச்சனைக்கு வருவோம்.

இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு வருவதற்க்கு முக்கிய காரணமாக இருப்பது அவர்களுடைய கல்யாண ஆசை. வெளிநாட்டுக்கு போய் கை நிறைய சம்பாதித்தால் நல்ல வசதியான வீட்டில் பெண் குடுப்பார்கள் என்ற ஆசை அவர்களை வெளிநாட்டின் பால் தள்ளுகின்றது.

migration-kidhours
migration-kidhours

ஆனால் பெண் பிள்ளைகளை பெற்ற தாய்மார்களுக்கு புரியவில்லை திருமண வாழ்க்கை வாழதானே ஒழிய டெலிபோனில் பேசி கொள்ள அல்ல… வெளிநாட்டில் மட்டுமே பணம் சம்பாதிக்க முடியும் என்பது இல்லை. உள்ளூரில் கூட திறமையான இளைஞனால் பணம் சம்பாதிக்க முடியும்..ஆம் நான் ஒத்து கொள்கின்றேன்.. வெளிநாடில் உள்நாட்டை விட சம்பளம் அதிகம் தான்.ஆனால் வாழ்க்கை அதில் உள்ள இளமை அதில் உள்ள பாசம், குழந்தையின் பரிசம்,பெற்றோர் நம் மீது காட்டும் அக்கறை, நாம் நம் பெற்றோருக்கு காட்டும் அந்த பரிவு, பணிவிடை,மனைவியின் காதல்,அதில் உள்ள அன்பு அதைவிட பெரியது அல்லவா?

 

உங்கள் குழந்தைகளின் மழலை பேச்சை விட பெரிய இன்பம் வெளிநாட்டில் என்ன
உண்டு…?

நீங்கள் உங்கள் குழந்தைக்கு அருகில் இருந்து நீங்கள் கொடுக்கும் பாதுகாப்பு
உங்களுடைய பேங்க் லாக்கர் கொடுக்குமா?

 

நண்பர்களே வெளிநாடில் மட்டும் தான் பனம் சம்பாதிக்க முடியுமா? ஏன் நம் நாட்டில்
தொழில் அதிபர்கள் இல்லையா? நம் நாட்டில் சம்பாதித்து குடும்பங்கள் நடக்க வில்லையா? நம்நாட்டில் சம்பாதித்து யாரும் கார் வாங்கவில்லயா? நம் நாட்டில் சம்பாதித்து யாரும் வீடு கட்ட வில்லயா? நம் நாட்டில் சம்பாதித்து யாரும் தங்கள் தங்கைகளுக்கு திருமணம் முடிக்க வில்லயா? எனது இந்த கேள்விகளுக்கு உங்கள் மனசாட்சியிடம் இருந்து இல்லை என பதில் சொல்ல முடியுமா?

 

அப்புறம் நாம் ஏன் வெளிநாட்டில் இருக்கின்றோம்?

எதாவது காரணம் இருக்கின்றதா? இருக்கின்றது…… அது வரட்டு கௌரவம்….
அப்புறம் பாதுகாப்பு மனப்பான்மை……….அப்புறம் சூழ்நிலை……..

 

இதுல உண்மையில் (நாமலே உருவாக்கி கொண்ட சூழ்நிலை அல்ல) சூழ்நிலை காரணமாக வெளிநாட்டில் இருப்பவர்கள் உண்மையில் என்னை பொறுத்த வரை பரிதாபத்திற்கு உரியவர்கள்..அவர்களை ஏதோ ஒன்று இங்கே தள்ளிவிட்டது என நினைத்து ஊரில் பாதி மனது இங்கே வெளிநாட்டில் பாதி மனது என வாழ்நாளை கழிப்பவர்கள். ஆனால் வருடங்கள் கடந்தவுடன் இளமை தொலந்தவுடன் இனி ஊரில் என்ன செய்வது என தெரியாமல் இங்கேயே தனது
வாழ்நாளை தொலைக்கும் துர்பாக்கிய சாலிகள்..

 

இரண்டாவது: பாது காப்பு மனப்பான்மை இவர்கள் அனைத்து விதத்திலும் வசதியாக
இருப்பார்கள் ஆனால் ஊருக்கு செல்ல பயம். எங்கே நமது வருமானம் நின்று விடுமோ என்ற பயம். ஊரில் வியாபாரம் செய்தால் நஷ்டமாகிவிடுமோ என்ற பயம்.இவர்களை அவர்கள் கம்பெனி போ ….. என கழுத்தை பிடித்து தள்ளினால் தான் சொந்த நாட்டுக்கு போவார்கள்.

foreign-move-kidhours
foreign-move-kidhours

அப்புறம் வறட்டு கௌரவம்; இங்கே தான் நாம எல்லோரும் சரண்டர்… நமக்கு தெரிந்தோ தெரியாமலோ இதிலே சிக்கி விடுகின்றோம்.நம் ஊரில் இன்று வேலைக்கு ஆட்கள்  கிடைக்கவில்லை ஆனால் நாம் இங்கு வேலைக்கு அலைந்து கொண்டிருக்கின்றோம்.நம் நாட்டில் உற்பத்திக்கு பஞ்சம் ஆனால் நாம் இங்கே உற்பத்தியை பெறுக்கி கொண்டிருக்கின்றோம்.. நம் நாட்டில், நம் நாட்டில் நாம் கொடுக்காத உழைப்பை நாம் இங்கே கொடுத்து கொண்டிருக்கின்றோம். காரணம் நம் நாட்டில் வேலை பார்க்க வெட்கம்…நாம் உள்ளே அழுக்காக இருந்தாலும் வெளியே வெள்ளையாக இருக்க விரும்புகின்றோம்…இங்கே வேஷத்துக்குதான் மதிப்பு என தெரிந்தே செய்கின்றோம்… ஆம் இங்கே வேஷத்திற்குதான் மதிப்பு, ஆனால் உண்மைதான் நிரந்தரம்.

நீ உன் வேஷத்திற்காக செய்யும் செலவு பணமாக இருந்தால் பரவாயில்லை ஆனால்? அது உன் வாழ்கையாக இருக்க கூடாது…..நீ உண்மையாக இருக்க செலவு செய்ய வேண்டியது இல்லை…உண்மையாக இருக்க வெட்கபட வேண்டியது இல்லை….

சம்பாத்தியம் என்பது தேவையை பூர்த்தி செய்யவே ஒழிய நம் தேவையே பணமாகிவிட
கூடாது.. இது அறிவுரை அல்ல… அறிவுரை சொல்லும் அளவுக்கு நான் வளரவும் இல்லை… ஆனால் வெளிநாட்டில் நாம் பணத்தை தவிர எதையும் பெறவில்லை என்பதே உண்மை….

 

என்ன செய்வது?வெளிநாடு வந்தால் தான் உள்நாட்டின் அருமையே புரிகின்றது.. அதற்குள் பத்து பதினைந்து வருடம் ஓடி விடுகின்றது…இளமை தொலைந்த உடன் சக்தி
குறைந்தவுடன் ஊருக்கு சென்று என்ன பலன்..என நீங்கள் கேட்பது புரிகின்றது…நாம் எல்லோரும் அடுத்த தலைமுறைக்காகதான் உழைத்து கொண்டிருக்கின்றோம்.நாம் சேர்த்து வைக்கும் பணம் கட்டி வைக்கும் வீடு வாங்கி வைக்கும் நகை இவை எல்லாம் நமக்கு பிறகு நம் குழந்தக்கு தானே?ஆக நாம் நமக்காக சிந்திக்க வேண்டும் …நமது குழந்தக்காக சிந்திக்க வேண்டும்… அதற்கு நாம் மன அளவில் திருந்த வேண்டும்…..

 

உள்நாட்டில் நாம் ஜெயிக்க வேண்டும்…அதற்கு நமக்கு துணிச்சல் வேண்டும்…போராட்ட குணம் வேணும்….திட்டமிட்டு ஜெயிக்க வேண்டும்… வெறும் ஆசை மட்டும் பத்தாது…
நமது லட்சியமாக அது இருக்க வேண்டும்… நாம் இங்கே படும் மன உளைச்சளுக்கு நாம் நம் நாட்டில் எவ்வளவு உழைச்சாலும் தகும்.ஆனால் முதளாளிதுவ மனம் கூடாது…. நாம் அடுத்தவரைவிட பெரியவர் இல்லை அதே போல் நாம் அடுத்தவரைவிட சிறியவரும் இல்லை என நினைத்து இறங்கி வேலை செய்ய வேண்டும்……..

 

நம்மிடம் உள்ள ஒரு குறை என்ன தெரியுமா? நமக்கு மேலே ஒருவர் இருந்தால்
நாம் மிகவும் பொறுப்பாக வேலை செய்வோம்.ஆனால் நாமே முதலாளி ஆகிவிட்டால் அந்த பொறுப்பு காணாமல் போய்விடும்..

இது தாங்க நம்முடைய வீக் பாய்ன்ட்…. இத புரிஞ்சி உழைச்சா நாம தாங்க வின்னர்…

நம்ம வாழ்க்கைதான் வெளிநாட்டுல போயிடிச்சு அடுத்த தலைமுறை நண்பர்களாவது வெளிநாட்டு போதையில் சிக்காம இருக்க தாங்க எனது இந்த முயற்சி தயவு செய்து உங்கள் ஆதரவை ஓட்டின் மூலமாக தெரிவிக்குமாறு கேட்டு கொள்கின்றேன்..

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.