Thursday, January 23, 2025
Homeபெற்றோர்நடைப்பயிற்சி செல்வதால் உண்டாகும் நன்மைகள் என்ன…?

நடைப்பயிற்சி செல்வதால் உண்டாகும் நன்மைகள் என்ன…?

- Advertisement -

 

- Advertisement -
nadaippom-kidhours
nadaippom-kidhours

இன்றைய சூழலில் நம் உடலுக்கு எவ்வித வேலையும் கொடுக்காமல் டெக்னாலஜி என்ற பெயரில் பல்வேறு உபகரணங்களையும், மின்சாதன இயந்திரங்களையும் பயன்படுத்தி உடலுக்கு அசைவும், பயிற்சியும் அளிக்காமல் சொகுசாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

 

- Advertisement -

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள ஒரே வழி தினமும் ஒரு மணிநேரம், வேண்டாம் ஒரு அரை மணி நேரமாவது நடை பயிற்சி மேற்கொள்வது தான். ஒரு நாளைக்கு முடிந்த அளவு அரை மணி நேரமாவது நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

- Advertisement -

பொதுவாக நடைப்பயிற்சி செய்ய அதிகாலை நேரமே உகந்தது. காலை எழுந்தவுடன் காலைக் கடன்களை முடித்து, தண்ணீர் அருந்திவிட்டு, இறுக்கமில்லாத ஆடையை அணித்துகொண்டு நடப்பதுதான் நடைப்பயிற்சி. நடைப்பயிற்சி என்றவுடன் சிறிது தூரம் நடப்பது அல்ல. குறைந்தது 2 கி.மீ ஆவது நடக்க வேண்டும். கடற்கரையிலோ, சாலை ஓரங்களிலோ அல்லது பூங்காக்களைச் சுற்றியோ நடக்கலாம்.

அதிகாலையில் செய்யும் நடைப்பயிற்சியால் அன்றைய தினம் முழுவதும் புத்துணர்ச்சியுடனும் சுறுசுறுப்புடனனும் வேலை செய்ய முடியும். முடிந்தவரை மெதுவாகவும், அமைதியாகவும் கைகளை நன்கு வீசி மூச்சுக்காற்றை நன்கு உள்வாங்கி வெளியிட்டு நடக்க வேண்டும். நடை ஒரே சீராக இருக்க வேண்டும். நடந்து வந்தவுடன் சிறிது நேரம் குனிந்து, நிமிர்ந்து கைகளை பக்கவாட்டில் அசைத்து உடற்பயிற்சி செய்தல் வேண்டும்.

நன்மைகள்:

  • ரத்த அழுத்தம், மன அழுத்தம் உள்ளவர்கள் வாக்கிங் செல்வது அவர்களின் இதயத்திற்கும், மனதிற்கும் மிகச் சிறந்தது. நடை பயிற்சி மேற்கொள்வதால் இதயம் பலமடைகிறது. மேலும் மூச்சு குழாய் சீராக செயல்படுகிறது.
  • செரிமானப் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் நடை பயிற்சி மேற்கொள்வதால் உடல் எடை குறைந்து வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும். இதனால் ஜீரண சக்தி அதிகரித்து செரிமானம் சீராகும்.
  • நடைப்பயிற்சி செல்வதால் நரம்புகளுக்கும், சதைகளுக்கு நல்ல அசைவு உண்டாகி ரத்த ஓட்டம் சீராக நடைபெறுகிறது. மன அழுத்தம், உயர் ரத்த அழுத்தம், குறைகிறது.
  • நீரிழிவு பிரச்சனை இருப்பவர்கள் கண்டிப்பாக தினமும் நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டும். சர்க்கரை என்பது நோயல்ல. இது ஒரு வகையான ஆரோக்கிய குறைபாடு. இக்குறைபாட்டை நாம் தினமும் நடை பயிற்சி மேற்கொண்டே சரிசெய்து விடலாம்.
- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.