Greens growing in space…!
விண்வெளியில் வீரர்கள் சாப்பிடுவதற்காக விண்வெளியிலேயே கீரைகளை வளர்த்து சாதனை படைத்தது நாசா. பல்வேறு ஆராய்சிகளை மேற்கொள்ள விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் உண்பதற்கு பதப்படுத்தப்பட்ட இறைச்சி, மீன்கள், சாக்லெட்டுகள், பழங்கள் உள்ளிட்டவற்றை தான் தங்களிம் உணாவாக உட்கொள்ளுவார்கள். இப்படி விண்வெளிக்கு சென்று அதிக நாட்கள் தங்கி இருக்கும் வீரர்களுக்கு அதிக ஊட்டச்சத்துகள் உள்ள உணவுகளை எவ்வாறு வழங்குவது என்பது குறித்து தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் விண்வெளியில் வளர்க்கப்பட்ட கீரைகள் குறித்து நாசா ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. 2024 ஆம் ஆண்டளவில் நிலவின் தென் துருவத்தில் மனிதர்களை தரையிறக்க நாசாவால் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டிற்குள் செவ்வாய் கிரகத்திற்கும் மனிதனை அனுப்ப நாசா முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அப்படி அதிக நாட்கள் விண்வெளிக்கு சென்று தங்கும் வீரர்கள் உட்கொள்ளும் உணவு அதிக நாட்கள் பதப்படுதபடுவதால் உணவின் தரம், சுவை, அவற்றில் உள்ள ஊட்டச்சத்துகளும் குறைகிறது. இதனால் வீரர்கள் எடைகுறைவது போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர்.
இதனை தடுக்க கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் விண்வெளியில் கீரை வளர்க்கும் செய்முறை நடந்து வந்துள்ளது. வீரர்கள் தங்கியுள்ள விண்கலனில் ஒரு பெரிய பீங்கான் தொட்டியில் பூமியில் இருந்து எடுத்து சென்ற மண்ணை நிரப்பி, ஒரு குழாய் மூலம் நீரை செலுத்தும் சிறிய நீர் பாசன முறையையும் வெளிச்சத்திற்கு எல்.ஈ.டி. விளக்குகளை வைத்து கீரையை விண்வெளி வீரர்களே வளர்த்தனர். அப்படி வளர்க்கப்பட்ட கீரை மீண்டும் பூமிக்கு அனுப்பி பரிசோதித்ததில் பூமியில் வளர்வது போன்றே விண்வெளியில் வளர்க்கப்பட்ட கீரையும் அனைத்து சத்துக்களை கொண்டு இருப்பதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இந்த முறையில் விண்வெளியில் கீரை சுமார் 36 முதல் 56 நாட்கள் வரை தடையில்லாமல் வளருவதாகவும் பல ஆண்டுகள் இப்படி ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு இப்பொது வெற்றி பெற்றுள்ளதாக நாசா கென்னடி விண்வெளி மையத்தின் விஞ்ஞானி ‘ஜியோயா மாஸா’ தெரிவித்தார்.