இங்கிலாந்தில் ஊரடங்கு விதிகளை அதிகமாக மீறியது யார்? என்பது குறித்து இங்கிலாந்தின் பல்கலைக்கழகங்கள் சார்பில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. Who violated the curfew Rule? – a study conducted in the UK
இங்கிலாந்தில் ஊரடங்கு விதிகளை அதிகமாக மீறியது யார்? என்பது குறித்து அண்மையில் அந்நாட்டின் ஷெப்பீல்டு மற்றும் அல்ஸ்டர் பல்கலைக்கழகங்கள் சார்பில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.
இதுதொடர்பாக 13 வயது முதல் 24 வயது வரையுள்ள 2 ஆயிரம் பேரிடம் கேள்விகள் கேட்கப்பட்டு பதில்கள் பெறப்பட்டன. இதில் 19-24 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களில் 50 சதவீதம் பேர், தாங்கள் ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியேறி இஷ்டம்போல் ஊர் சுற்றியதையும், இதற்காகதாங்கள் எடுத்த சாகச முயற்சிகளையும் பெருந்தன்மையுடன் ஒப்புக்கொண்டனர். இவர்களில் 5-ல் ஒருவர் போலீசிடம் பிடிபட்டு அபராதமும் செலுத்தியுள்ளனர்.
இதே வயது கொண்ட இளம்பெண்களில் 25 சதவீதம் பேர், இப்படி விதிமீறல்களில் ஈடுபட்டு உள்ளனர். எஞ்சிய 25 சதவீதம் பேர் 13-18 வயதுக்கு இடைப்பட்டவர்கள் ஆவர்.