செயற்கை ஏரி – Artificial lake (blue lagoon Reykjavik Iceland)
‘பூமியின் மிக அற்புதமான இடங்கள்’ என்ற தலைப்பின் கீழ் உலகின் 25 அதிசயங்களைப் பட்டியலிட்டது ‘நேஷனல் ஜியோகிராபிக்’. நீர், நிலம், வானம் என்று மூன்று வகைகளாக இந்த அதிசயங்களைப் பிரித்தது. கலிபோர்னியாவில் உள்ள ரெட்வுட் மரங்கள், எவரெஸ்ட் போன்றவை ‘வானம்’ பிரிவிலும்; ஹவாய் எரிமலைகள், சஹாரா பாலைவனம் போன்றவை ‘நிலம்’ பிரிவிலும் இடம்பிடித்தது பெரிய ஆச்சர்யம் இல்லை. ஆனால், ஐஸ்லாந்தில் உள்ள நீல வண்ண ஏரி (blue lagoon Reykjavik Iceland) ‘நீர்’ பிரிவில் இடம்பிடித்ததுதான் பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.
காரணம், எவரெஸ்ட், சஹாரா போல நீல வண்ண ஏரி அவ்வளவாக பிரபலமில்லை. ஆயிரக்கணக்கானோர் வந்து போகும் சுற்றுலாத்தலமும் இல்லை. இப்படியான ஒரு ஏரி இருப்பதே இந்தப் பட்டியலுக்குப் பின்தான் பலருக்கும் தெரிய வந்தது. ப்போது இந்த ஏரிக்கு விசிட் அடித்தவர்கள் எல்லோரும் திரும்பத் திரும்ப செல்கின்றனர். இயற்கையின் அதிசயமும் அறிவியலின் நுட்பமும் சங்கமிக்கும் ஓர் இடமாக மிளிர்கிறது நீல வண்ண ஏரி. ஐஸ்லாந்தின் தென்மேற்கில் வீற்றிருக்கும் இந்த ஏரியை மனிதனின் படைப்புகளில் தலைசிறந்த ஒன்று என்று கூட சொல்லலாம்.
ஆம்; செயற்கையாக உருவாக்கப்பட்ட ஏரி இது!புவி வெப்ப ஆற்றலால் இந்த ஏரியில் இருக்கும் நீரின் வெப்ப நிலை 37 முதல் 39 சென்டிகிரேட் வரை எப்போதுமே இருக்கும். 70 சதவீத கடல் நீர், 30 சதவீத நல்ல நீருடன் சிலிகா என்ற வேதிப்பொருளைக் கலப்பதுதான் இதன் நீல வண்ணத்துக்குக் காரணம்.
இதில் குளிப்பது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது என்ற காரணத்தினால் மட்டுமே வருடந்தோறும் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் ஐஸ்லாந்தை நோக்கிப் படையெடுக்கின்றனர். இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மட்டும் அனுமதி கிடையாது. தவிர, உடல் ஊனமுற்றவர்கள், சக்கர நாற்காலியின் துணையில்லாமல் எங்கேயும் நகர முடியாதவர்கள் குளிப்பதற்குக் கூட இங்கே வசதியிருக்கிறது!
kidhours
general knowledge#general knowledge questions and answers#general knowledge questions
general knowledge 2019#general knowledge in tamil#common general knowledge questions and answers#general knowledge 2018#general knowledge questions and answers in tamil
gk questions#100 easy general knowledge questions and answers#general knowledge questions with answers#general knowledge quiz with answers
general knowledge questions and answers for competitive exams#gk questions in tamil
general knowledge questions in tamil#2019 general knowledge#easy general knowledge questions and answers#general knowledge questions and answers in english
general knowledge 2020#world general knowledge#general knowledge test
gk questions and answers