Friday, November 22, 2024
Homeபெற்றோர்குழந்தைகளின் கை, கால்களில் ஏற்படும் திடீர் மாற்றம்... இது கொரோனாவின் புதிய அறிகுறியாம்! உடனே மருத்துவரிடம்...

குழந்தைகளின் கை, கால்களில் ஏற்படும் திடீர் மாற்றம்… இது கொரோனாவின் புதிய அறிகுறியாம்! உடனே மருத்துவரிடம் போயிடுங்க -coronavirus symptoms for kids

- Advertisement -

 

- Advertisement -
covid-19-symptoms-kidhours.jpg
covid-19-symptoms-kidhours.jpg

குழந்தைகளின் கால்விரல்களில் புண்ணாதல், தோலின் நிறம் மாறுதல், கொப்புளம் போல் போடுதல் உள்ளிட்டவை இருந்தால் அது கொரோனாவின் புதிய அறிகுறியாக இருக்கலாம் என வெளிநாட்டு தோல்நோய் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸின் அறிகுறிகளாக காய்ச்சல், இருமல், தொண்டை எரிச்சல், சளி, மூச்சு திணறல் உள்ளிட்டவை சொல்லப்பட்டு வந்தது. பெரும்பாலான இடங்களில் பச்சிளம் குழந்தைகளும் இந்த நோய்க்கு இரையாகினர்.

- Advertisement -

பெரியவர்களையும் அதிகமாக தாக்கி வருகிறது. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் இத்தாலியில் குழந்தைகளின் கால்களில் மருத்துவர்கள் ஒரு வித்தியாசத்தை கண்டனர்.

- Advertisement -

தோல்நோய் நிபுணர்கள்

அதாவது கால்களின் விரல்கள், விரல் இடுக்குகளில் புண்ணாதல், கொப்புளம் போல் வருதல், அந்த தோலின் நிறம் மாறுதல் போன்றவற்றை பார்த்தனர். இது கொரோனாவின் புதிய அறிகுறியாக இருக்கலாம் என தெரிவித்துள்ளார்கள். இது தொடர்பாக ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் தோல்நோய் நிபுணர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இத்தாலி

இது போல் கால்விரல்களில் ஒரு வித அழற்சியானது துருவ பகுதிகளில் உள்ள மக்களிடையே ஏற்படும். பனிக்கட்டியால் கால்களில் ரத்த நாளங்கள் வீக்கத்தை ஏற்படுத்தும். கால்விரல்களில் கடுமையான தசைப்பிடிப்புகளும் ஏற்படுகிறது.

ஆனால் தற்போது இத்தாலியில் ஏற்பட்டுள்ள இந்த புதிய அறிகுறிக்கு மருத்துவர்கள் கோவிட் டோஸ் (Covd toes) என பெயரிட்டுள்ளனர். இது போன்ற அறிகுறியை கோவிட் 19 அதிகம் வாழும் பகுதிகளில் உள்ள குழந்தைகளிடம் மருத்துவர்கள் அதிகம் கண்டறிந்துள்ளனர்.

அமெரிக்கா

இது போன்ற புதிய அறிகுறி அமெரிக்காவின் பாஸ்டன் உள்ளிட்ட இடங்களில் காணப்படுகிறது. இது போன்ற அறிகுறிகளுடன் உள்ள குழந்தைகளுக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்படுகிறது.

இத்தாலியில் உள்ள குழந்தைகளுக்கு இருமல், காய்ச்சல் போன்ற முன்பு கூறப்பட்ட கொரோனா அறிகுறிகள் ஏதும் இல்லை. ஆனால் அவர்களின் கால்விரல்களில் ஒருவித அழற்சி காணப்படுகிறது.

வித்தியாசம்

இதுதொடர்பாக மருத்துவர்களும், தோல்நோய் மருத்துவர்களும் விவாதித்து வருகிறார்கள். உலக நாடுகளில் உள்ள சுகாதார அமைப்புகள் அனைத்தும் கொரோனா அறிகுறி உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். ஆனால் கொரோனா அறிகுறி இல்லாதவர்களை கண்டுபிடிப்பது அவர்களுக்கு மிகப் பெரிய சவால் இருந்து வருகிறது.

பொதுவாக வறட்டு இருமல், காய்ச்சல், தொண்டை எரிச்சல், உடல் அசதி, மூச்சு திணறல் உள்ளிட்டவை பொதுவான அறிகுறிகளாக உள்ளன. ஆனால் திடீரென சுவை அறியாமல் போவது, வாசனை அறியாமல் போவது, கண்களில் பிங்க் நிறம் ஏற்படுவது போன்றவை கொரோனாவின் வித்தியமாசமான அறிகுறிகளாக கருதப்படுகின்றன.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.