இத்தாலியில் நேற்று ஒரே நாளில் 651 பேர் உயிரிழந்ததை அடுத்து உலக அளவில் இறப்பு எண்ணிக்கை 14,616 ஆக உயர்ந்துள்ளது. மொத்த இறப்பு எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு இத்தாலியில் நிகழ்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பு தொடங்கியது முதல் தற்போது வரை 3, 261 பேர் உயிரிழந்துள்ள சீனாவை பின்னுக்குத் தள்ளி 5,476 பேரை இத்தாலி இழந்துள்ளது.
ஸ்பெயினிலும் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில் நேற்று ஒரே நாளில் 375 பேர் உயிரிழந்த நிலையில் அங்கு மொத்த இறப்பு எண்ணிக்கை 1,756 ஆக உயர்ந்துள்ளது. ஈரானில் நேற்று 129 பேரும், அமெரிக்காவில் 117 பேரும், ஃபிரான்ஸில் 112 பேரும் கொரோனா தாக்குதலுக்கு பலியாகியுள்ளனர்.
டொமினிக்கா, சிரியா, மொஸாம்பிக் நாடுகளில் முதல் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. செக் குடியரசு, ஆஃப்கானிஸ்தான், மாசிடோனியா நாடுகளில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.