Friday, November 22, 2024
Homeகல்விஅனர்த்தங்கள்கொரோனா வைரஸ் எப்படி பரவியது?#corona#Coronavirus#COVID-19

கொரோனா வைரஸ் எப்படி பரவியது?#corona#Coronavirus#COVID-19

- Advertisement -
மனிதர்களுக்கு மத்தியில் வெகுவேகமாக பரவிவரும் இந்த வைரஸ், முதன்முதலில் வவ்வால்களில்தான் தோன்றியது என்றும், அதனைத் தொடர்ந்து ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் மற்றும் வாழக்கூடிய பாலூட்டிகள் மற்றும் ஒட்டகங்கள் ஆகியவற்றை தொற்றி இறுதியாக மனிதர்களுக்கு தொற்றியது என்றும் ஆய்வுகள் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த கொரோனா வைரஸ் நோயைப் பொறுத்தவரை, முதலில் பாதிக்கப்பட்டவர்கள் சீனாவின் ஊஹான் நகரிலுள்ள மீன் மார்கெட்டில் வேலை செய்பவர்கள் மற்றும் அங்கு மீன் வாங்கிய வாடிக்கையாளர்கள் என்றே செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த மீன் மார்க்கெட்டில் கறிகள் மற்றும் இறைச்சிக்காக விற்கப்படும் உயிருள்ள கோழி, கழுதை, செம்மறி ஆடு, பன்றி, ஒட்டகம், நரி, மூங்கில் எலி மற்றும் பாம்பு உள்ளிட்ட ஊர்வன என பல விலங்குகள் விற்பனையாகும் என்று கூறப்படுகிறது.
coronavirus-in-tamil
coronavirus-tamil-news
மேலும், மருத்துவ ஆய்விதழ் ஒன்றில் (Journal of Medical Virology) வெளியான ஒரு ஆய்வறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ள மரபியல் ஆய்வுகளின் அடிப்படையில், சார்ஸ் மற்றும் மெர்ஸ் வைரஸ்கள் போல, இந்த கொரோனா வைரஸ்களும் அடிப்படையில் ஒரு வவ்வாலில் தோன்றியிருக்கும் என்றே விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
கொரோனா வைரசின் மரபணு மீதான மேலதிக ஆய்வுகளில் இது பாம்புகளில் இருந்து வந்திருக்கும் என்று சுட்டிக்காட்டும் உறுதியான சில முடிவுகள் கண்டறியப்பட்டுள்ளன. வவ்வால்களை பாம்புகள் வேட்டையாடுவதால், வவ்வால்களில் இருந்த கொரோனா வைரஸ் முதலில் பாம்புக்கு தாவி பின்னர் பாம்புகளை சாப்பிட்ட மனிதர்களுக்கு பரவிவிட்டது என்பதே தற்போதைய உறுதியான தகவல்.
ஆனால், குளிர்ச்சியான ரத்தம் கொண்ட வவ்வால் மற்றும் பாம்புகளில் வாழும் கொரோனா வைரஸ் எப்படி கதகதப்பான ரத்தம் கொண்ட மனிதர்களுக்கு பரவியது என்பது இன்னும் புரியாத புதிராகத்தான் உள்ளது.
 
கொரோனா வைரசிடமிருந்து எப்படி நம்மை பாதுகாத்துக்கொள்வது?
கொரோனா வைரஸ் என்னைத் தாக்குமா? என்று கேட்டால் நீங்கள் சீனாவின் ஊஹான் நகருக்குச் செல்லாமல், அங்குள்ள யாருடனாவது தொடர்பில் இல்லாமல் இருந்தால் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில், இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் கொரோனா வைரஸ் தடுப்புக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தீவிரமாக செய்து வருகின்றன.
coronavirus-in-tamil
coronavirus-tamil-news
ஆனால், சளி, தொண்டை வலி, தலைவலி, ஜுரம், இருமல் உபாதைகளை ஏற்படுத்தும் கொரோனாவைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்ட ஒருவரின் தும்மல், இருமல் மற்றும் பயன்படுத்திய பொருட்கள் போன்றவற்றால் வைரஸ் பரவும் என்பதால், பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இல்லாமல் இருப்பதும், கை கால்களை எப்போதும் சோப்பு போட்டு கழுவுவதும், கை கழுவாமல் கண், மூக்கு மற்றும் வாய் போன்ற பகுதிகளை தொடாமல் இருப்பதும் கொரோனா வைரஸ் நமக்கு தொற்றாமல் இருக்க நாம் மேற்கொள்ள வேண்டிய செயல்கள் ஆகும்.
kidhours-news
coronavirus-tamil-news#corona,tamil-news-corona#corana#kidnews#tamil-news#corana-prevention#corona-virus-in-tamil#corona-mask-in-tamil#corona-mask#corana-treatment#corona-in-china#corona-in-italy#corona-in-usa#corona-in-india#korana#korona-in-uk#corona-in-canada#corona-in-sri  lanaka#corona-spread
- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.