History of Potato தேடல்
உருளைக்கிழங்கை முதலில் தென் சேர்ந்த நாட்டில்தான் கண்டுபிடித்தார்கள். 1537-ல் தங்க வேட்டைக்காக தென் அமெரிக்காவுக்கு சென்ற ஸ்பெயின் நாட்டு வீரர்கள் ஆண்டீஸ் மலைப்பிரதேசத்தில் கற்றி அலைந்து கொண்டிருந்தபோது அங்கு வாழ்ந்த மக்கள், வீரர்களின் பசியைத் தணிக்க வேக வைத்த ருசி மிக்க கிழங்கை கொடுத்தனர்.
அதுவே உருளைக்கிழங்கு. அதன் பிறகு சிலி நாட்டில் உருளைக் கிழங்கை வேகலைத்து செவ்விந்தியர் கள் உண்பதை 1557-சர் பிரான்சிஸ் டிரேக் என்பவர் கண்டார்.
தங்கத்தை தேடிச்சென்ற ஸ்பெயின் நாட்டு வீரர்களுக்கு தங்கம் கிடைத்ததோ இல்லையோ, ருசி மிக்க உருளைக்கிழங்கு கிடைத்தது. அவர்கள் மூலம் அது ஸ்பெயின் நாட்டிற்குப் பரவியது. பின்னர் 1580-ல் இக்கிழங்கு இத்தாலிக்கு கொண்டு போகப்பட்டு பயிரிடப்பட்டது. அங்கிருந்துதான் மற்ற மேலை நாடு களுக்கு அறிமுகம் ஆயிற்று.

ஆஸ்திரியா, ஜெர்மனி ஆகிய நாடுகளில் உருளைக்கிழங்கு செடி பெருமாவில் பெயரிடப்பட் டது.சர் வால்டர் ரேலே என்பவர் 1588-ல் அயர்லாந்தில் அதை பயிரிட்டார். 1590-ல் அது இங்கிலாந்துக்கும் பரவியது. 1612-ல் இங்கிலாந்தில் இருந்து பர்முடா நாட்டுக்கும், அங்கே இருந்து வெர்ஜினியாவுக்கும் பர வியது.
இவ்வாறு காட்டுக்கிழங் காக இருந்த உருளைக்கிழங்கு நாட்டு மக்கள் உண்ணும் உணவு பொருளாய் ஏற்றம் பெற்றது.
பிரான்ஸ் நாட்டு மன்னனாக இருந்த பதினான்காம் லூயிக்கு உருளைக் கிழங்கு பற்றி தெரிய வரவே, பிரான் சில் அதை பெருவாரியாக பயிரிட கட்டளையிட்டார். அத்துடன் லூயி மன்னன் உருளைக்கிழங்கு செடியின் பூவை தனது சட்டை பொத்தான் துளையில் பொருத்திக்கொண்டார்.
ஒருவழியாக, போர்ச்சுக்கீசியர் மூலமாக உருளைக்கிழங்கு இந்தியாவுக்கு வந்தது. ஆனால் நம் நாட்டு மக்களால் அப்போது அது விரும்பிய உணவு பொருளாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 17-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயரிடம் இந்தக் கிழங்கின் மகிமையை தம் நாட்டு மன்னர் கள் அறிந்து, உணவில் சேர்த்துக் கொண்டனர்.
மெல்ல மெல்ல அதை மற்றவர்களும் உண்ணத் தொடங்கினர். பதினெட்டாம் நூற்றாண்டில்தான் இந்தியாவில் அதை பயிரிடத்தொடங்கினர்.
Kidhours – History of Potato
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.