Wednesday, February 5, 2025
Homeசிறுவர் செய்திகள்சாக்கடலின் அதிசயம் தெரியுமா ? Dead Sea in Tamil

சாக்கடலின் அதிசயம் தெரியுமா ? Dead Sea in Tamil

- Advertisement -

Dead Sea in Tamil  பொது அறிவு செய்திகள்

- Advertisement -

உலகில் பரந்து காணப்படும் கடற்பரப்புக்களில் பலவிதமான விசித்திர தன்மைகொண்ட கடற்பகுதியில் காணப்படுகின்றன.

அந்தவகையில் இந்த சாக்கடல் பற்றி நோக்கும்போதுஇது உப்பு கடல் , இறந்த கடல் என பல்வேறு பெயர்களில் அழைக் கப்படுகிறது.

- Advertisement -

இந்த கடல் இஸ்ரேல் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளின் நடுவே அமைந்துள்ளது. இறந்த கடல், சாக்கடல் என்று இதற்கு பெயரிட என்ன காரணம் தெரியுமா? சமுத்திரங்களில் எண்ணமுடியாத உயிரினங்கள் காணப்படுகின்றபோதிலும் இந்தக் கடலில் உயிரினங்கள் எதுவும் வாழ முடியாதா நிலை காணப்படுகின்றது . அதனால்தான் அப்பெயரில் அழைக்கப்படுகிறது.

- Advertisement -

இதனை கடல் என்று அழைத்தாலும் உண்மையில் இது மிகப்பெரிய உவர் நீர் ஏரி ஆகும். ஆம்! ஜோர்டான் ஆற்றில் இருந்தே இந்த ஏரிக்கு பெருமளவு நீர் கிடைக்கிறது. அத்துடன் அதன் அடிப்பகுதி மற்றும் சுற்றியுள்ள நீரூற்றுகளில் இருந்தும் நீர் வந்தடைகிறது. இதனால் இந்த ஏரியைச் சுற்றி சிறிய நீர்த்தேக்கங்களும், புதை மணல் பகுதிகளும் உருவாகி உள்ளன.

சுமார் 377 மீட்டர் ஆழமுடைய இந்த ஏரியை சுற்றி நிலப்பரப்புகள்தான் ஆக்கிரமித்திருக்கின்றன. ஆனாலும் உவர் நீர் என்பதால் கடல் நீரை விட கிட்டத்தட்ட பத்து (10) மடங்கு அதிகம் உப்புத் தன்மை கொண்டிருக்கிறது. சாதாரணமாக ஒரு லிட் டர் கடல் நீரை காய்ச்சும் போது 35 கிராம் உப்பு கிடைக்கும். ஆனால், சாக்கடலின் ஒரு லிட்டர் நீரை காய்ச்சினால் 340 கிராம் உப்பு கிடைக்கும்.

குறித்த சாக்கடல் 67 கி.மீ நீளமும், 18 கி.மீ அகலமும் உடையது. அதிகளவு உவர்ப்புத் தன்மையுடைய இந்த நீரில் மீன்களோ, பிற தாவரங்களோ வாழ முடியாவிட்டாலும் மிகச் சிறிய அளவிலான நுண்ணுயிரிகள் வசிக் கின்றன. மழைக்காலத்தில் உப்புத் தன்மை சற்று குறைவதால் குறுகிய காலத்திற்கு மட்டும் உயிரினங்கள் வாழும்.

Dead Sea in Tamil  பொது அறிவு செய்திகள்
Dead Sea in Tamil  பொது அறிவு செய்திகள்

அத்துடன் எந்தவொரு நீச்சல் தெரியாத மனிதன் கூட இங்கு இறங்கி விளையாடலாம். இதில் உள்ள அதிக உவர்ப்புத்தன்மை காரணமாக மனிதன் நீரின் உள்ளே மூழ்கும் அபாயம் இல்லை. அதனால் மனிதர்கள் விரும்பி செல்லும் ஒரு புகழ்பெற்ற இடமாக திகழ்கிறது. சாக்கடலில் உற்சாகமாக விளையாடியும், நீரில் மிதந்தும் பலரும் பொழுதை கழிக்கிறார்கள்.

 

Kidhours – Dead Sea in Tamil

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.