Tamil Traditional Kuravaikkoothu கல்வி
தமிழ் கலாச்சாரத்தை முக்கியத்துவம் பற்றி ஆராய்ந்து பார்க்கும் நாட்டுப்புற இலக்கியங்கள் மற்றும் கலைகள் முக்கியமானவை அந்தவகையில் நாட்டுப்புறக் கலைகளுள் ஒன்று, கூத்து ஆகும். ‘கூத்து’என் ‘றால் ‘ஆடல்’ என்பது பொருள்.
இந்த ‘குரவைக்கூத்து’ என்பது மிகவும் பழமையான கூத்து வகைகளுள் குறிப்பிடத்தக்கது. இது மக்களிடையே செல்வாக்குப் பெற்ற கலையாக விளங்கியது. இக்கூத்தானது பின்னணி இசைக்கு ஏற்ப பல கலைஞர்கள் சேர்ந்து ஆடும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும்.
அந்தவகையில் இவ்வகைக் கூத்து பழங்காலத் தமிழ்ச் சமூகம் தொட்டு, இன்றுவரை வழக்கில் உள்ளது. போர் நிகழும் காலத்திலும், ஏதேனும் தீங்கு நிகழுமோ என்ற அச்சம் மனிதர்களை அலைக்கழிக்கும் வேளையிலும், பொழுது போக்குக்காகவும் கலைஞர்கள் எழுவரேனும் ஒன்பது பேரேனும் கைகோத்தாடும் ஒருவகைக் கூத்து ஆடி வந்ததால் இது ‘குரவைக்கூத்து’ என அழைக்கப்படுகிறது.
இந்த நிகழ்வு மிக முக்கியமான தமிழ் பாரம்பரிய கலையாகும். இது ஒப்புமை எனவும் இலக்கியத்தில் குரவை அயர்தல்,குரவை தூங்குதல், குரவை முனைதல், குரவை நிற்றல், குரவையோடொலித்தல், குரவை தழு உதல் என்றெல்லாம் அழைக்கப்படுகின்றது.
Kidhours – Tamil Traditional Kuravaikkoothu
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.