Thiruvalluvar Year தினம் ஒரு திருக்குறள் கற்போம்
திருவள்ளுவர் பற்றிய மற்றுமோர் விடயத்தை ஆராய்ந்து தெரிந்துகொள்வோம்.
அதாவது திருவள்ளுவர் ஆண்டு பற்றி கேள்விப்பட்டு இருப்போம். அதை எப்படி ‘அறிந்துகொள்வது என்பது பலருக்கும் தெரியாது. திருவள்ளுவர் ஆண்டு என்பது தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படும் அதிகாரப்பூர்வமான தமிழ் நாட்காட்டி முறையாகும்.
அதாவது உலகப் பொதுமறையான திருக்குறள் தந்த வள்ளுவர் பிறந்த தாகக் கூறப்படும் ஆண்டின் அடிப்படையில் இது கணக்கிடப்படுகிறது என்பதே உண்மை
அதாவது நாம் தற்போது பயன்படுத்தும் கிரிகோரியன் நாட்காட்டியுடன் ஒப்பிடும் போது திருவள்ளுவர் ஆண்டு கூடுதலாக 31 ஆண்டுகள் இருக்கும் என சொல்லப்படுகிறது.
அதற்கமைவாக கிரிகோரியன் நாட்காட்டியில் பின்பற்றப்படும் 2025-ம் ஆண்டை, திருவள்ளுவர் ஆண்டோடு கூட்டும் போது இந்த திருவள்ளுவராண்டு எதுவென்று தெரிந்து விடும். உதாரணமாக (2025+31=2056).
அதாவது இந்த திருவள்ளுவர் ஆண்டு 2056 என்பதாகும். இதனையே திருவள்ளுவர் நாற்கட்டி என கூறப்படுகின்றது.
Kidhours – Thiruvalluvar Year
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.