Eowyn Cyclone in UK உலக காலநிலை செய்திகள்
ஐரோப்பாவை அச்சுறுத்தி வரும் இயோன் என பெயரிடப்பட்டுள்ள சூறாவளி அசாதாரண முறையில் பிரித்தானியாவை தாக்கவுள்ளதாக அந்த நாட்டு வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.
குறித்த சூறாவளியின் தன்மை வலுவாக காணப்படுவதன் காரணமாக அங்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பாவின் வட அயர்லாந்து மற்றும் ஸ்கொட்லாந்தின் சில பகுதிகளில் சூறாவளியின் தாக்கம் பாரியளவில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்டுள்ள பிரதேசங்களின் கரையோர பகுதிகளில் மணிக்கு 100 மைல் வேகத்தில் காற்று வீசக்கூடும் என அந்த நாட்டின் (பிரித்தானிய) வானிலை அவதான நிலையத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது . பாதிக்கப்படக்கூடிய போக்குவரத்துகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
வட அயர்லாந்தில் உள்ள பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், வேல்ஸ், ஸ்கொட்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய இடங்களிலும் சில பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.
அத்துடன் 715,000 குடியிருப்புக்களிற்கு மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Kidhours – Eowyn Cyclone in UK
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.