Wonder of Person தேடல்
தனிநபரால் நிகழ்த்த முடியாத விடயத்தை செய்து அதிசயக்கவைத்துளார் அமெரிக்காவில் வசித்த எம்.சி.டேவிஸ் மிகப் பெரிய தொழிலதிபராகவும் சூதாட்டக்காரராகவும் இருந்தார் 20 ஆண்டுகளுக்கு முன்பு இயற்கையைப் பாதுகாக்கும் முயற்சியில் இறங்கினார்.
அதாவது ஏற்கனவே அழிந்து வரும் காடுகளைப் பாதுகாக்கவும் புதிய காடுகளை உருவாக்கவும் ஆரம்பித்தார். இதற்காகத் தன் சொத்தில் இருந்து 9 கோடி டொலர்களை செலவு செய்தார். ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை புளோரிடாவில் வாங்கினார்.
அந்த இடங்களில் பைன் மாங்களை வளர்த்தார். மரங்கள் ஓரளவு வளர ஆரம்பித்த பிறகு தன்னால் முடிந்தவரையான விலங்குகள், பறவைகள், பூச்சிகள் போன்றவற்றைக் கொண்டு வந்து காட்டுக்குள் விட்டார் குறிப்பாக அரியவகை உயிரினங்களை பாதுகாக்க விரும்பினார் . அத்துடன் வவ்வால்களைக் காப்பதற்கு செயற்கை குகை களை அமைத்தார், நீர்நிலைகளை உருவாக்கி,கடல் ஆமைகளை வளர்த்தார். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளில் 53 ஆயிரம் ஏக்கரில் காடுகளை வளர்த்திருந்தார் டேவிஸ்,
இந்த இயற்கையான காடுகளைப் போலவே புற்கள், மணற்குன்றுகள், சமவெளிகள், கழிமுகங்கள் எல்லாம் இந்தக் காட்டில் உருவாகிவிட்டன. அழிந்து வரக்கூடிய கடல் ஆமைகள் உட்பட 360 உயிரினங்கள் தற்போது வசித்து வருகின்றன.
இந்த காலகட்டத்தில் கடந்த ஆண்டு நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட் டார் டேவிஸ், இனி தான் பிழைக்க முடி யாது என்று தெரிந்தவுடன், மருத்துவ மனையை விட்டு வெளியேறி தான் அமைத்த பைன் மரக் காட்டுக்குள் வந்து தற்கொலை செய்து கொண்டார்
அத்துடன் டேவிஸ்.சுற்றுச்சூழலைக் காக்கும் தன்னுடைய 300 ஆண்டுகாலத் திட்டத்துக்குத் தேவையான அனைத்தையும் செய்து வைத்துவிட்டார் டேலிஸ், தான் செய்த அளப்பெரிய சேவைகளை விளம்பரப்படுத்திக் கொள்ளாததால், அவர் இருக்கும்போது அவரது சாதனை வெளியே தெரியவில்லை.
அவர் மறைந்த பிறகு, அமெரிக்கா முழுவதும் பேசப்பட்டது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சூழலியலாளர்கள், பள்ளி மாணவர்கள் என்று ஏராளமானவர்கள் கல்விக்காகவும் ஆராச்சிகளுக்காகவும் இந்தக் காடுகளுக்கு வந்து பார்வையிட்டு செல்கின்றனர் இது உலக மக்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைகின்றது.
Kidhours – Wonder of Person
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.