Sunday, January 12, 2025
Homeசர்வதேச தினங்கள்பெப்ரவரிசர்வதேச கல்வி தினம் - ஜனவரி 24 International Educational Day in Tamil

சர்வதேச கல்வி தினம் – ஜனவரி 24 International Educational Day in Tamil

- Advertisement -

International Educational Day in Tamil சர்வதேச கல்வி தினம்,  சிறுவர் கட்டுரை

- Advertisement -

காலத்திற்கு காலம் மாற்றமடையும் மனித குலத்தின் மத்தியில்  மனித நல­னையும், நிலை­யான அபி­வி­ருத்தி இலக்­கு­க­ளையும் அடை­வதில் கல்­வியின் முக்­கி­யத்­து­வத்தை கௌர­விக்­கு­மு­க­மாக ஐக்­கிய நாடுகள் சபையின் பொதுச் சபையால் இந்தத் தினம் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டது.இந்த தினத்தின் முக்கியத்துவம் மற்றும் வரலாறு பற்றி சற்று தெரிந்து கொள்வோம்

இந்த சிறந்த கல்வி தினம் கல்­வி­யையும் அதனைக் கற்­ற­லையும் மனி­த­கு­லத்தின் மிகப் பெரிய புதுப்­பிக்­கத்­தக்க வள­மாக நிலை­நி­றுத்­து­கி­றது. அத்­தோடு, அடிப்­படை உரி­மைக்கும் பொது நன்­மைக்­கு­மான அதன் வகி­பா­கத்தை மீள் உறு­திப்­ப­டுத்­து­கி­றது. அந்த வகையில் நிலை­யான அபி­வி­ருத்­திக்­கான 2030 நிகழ்ச்சி நிரலை இது செயற்­ப­டுத்­து­கி­றது. இது ‘அனை­வ­ருக்கும் சம­மா­னதும் தர­மா­ன­து­மான கல்வி மற்றும் அனை­வ­ருக்கும் வாழ்நாள் முழு­வதும் கல்வி’ என்ற இலக்­கி­னுள் அடங்­கு­கி­றது.

- Advertisement -

ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் (UNHQ நியூயார்க்) ‘நிலையான அமைதிக்கான கற்றல் குறித்த உயர்நிலை உரையாடல்’ போன்ற பல நிகழ்வுகளுடன் இந்த நாள் கொண்டாடப்படும், இது ‘தன்னையும், பிறரையும், பூமியையும் மற்றும் பலவற்றையும் கவனித்துக் கொள்ளக் கற்றுக்கொள்வது’ என்ற வகையிலான விழாவாக நடைபெறும்.

- Advertisement -

2018 ஆம் ஆண்டில், டிசம்பர் 3, 2018 அன்று ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை (UNGA) நிறைவேற்றிய தீர்மானத்தின் மூலம் ஜனவரி 24 சர்வதேச கல்வி தினமாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, முதல் சர்வதேச கல்வி தினம் ஜனவரி 24, 2019 அன்று அனுசரிக்கப்பட்டது.

அப்போதிருந்து, ஆண்டுதோறும் ஜனவரி 24 சர்வதேச கல்வி தினமாக கொண்டாடப்படுகிறது.
பாகுபாடு, வெறுப்பு, இனவெறி மற்றும் வெறுப்பு பேச்சு ஆகியவற்றின் ஆபத்தான எழுச்சிக்கு இணையாக வன்முறை மோதல்களின் எழுச்சியை உலகம் காண்கிறது. இந்த வன்முறையின் தாக்கம் புவியியல், பாலினம், இனம், மதம், அரசியல், ஆஃப்லைன் மற்றும் ஆன்லைனில் எந்த எல்லையையும் மீறுகிறது.

அமைதிக்கான செயலூக்கமான அர்ப்பணிப்பு முன்னெப்போதையும் விட இன்று மிகவும் அவசரமானது அமைதி, மனித உரிமைகள் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான கல்விக்கான யுனெஸ்கோ பரிந்துரையால் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி, கல்வி இந்த முயற்சியின் மையமாக உள்ளது. அமைதிக்கான கற்றல் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும், மேலும் கற்றவர்களுக்குத் தேவையான அறிவு, மதிப்புகள், அணுகுமுறைகள் மற்றும் திறன்கள் மற்றும் நடத்தைகள் மூலம் அவர்களின் சமூகங்களில் அமைதியின் முகவர்களாக மாற உதவ வேண்டும்.

இதை மனதில் வைத்து, யுனெஸ்கோ இந்த ஆண்டு கொண்டாட்டங்களை சமூக ஊடகங்களின் தோற்றம் காரணமாக சமீப ஆண்டுகளில் அதிகரித்துள்ள வெறுப்புப் பேச்சுகளை எதிர்கொள்வதில் கல்வி மற்றும் ஆசிரியர்கள் வகிக்கும் முக்கிய பங்கிற்கு அர்ப்பணிக்கிறது.

கல்­விக்­கான மனி­த­நேய அணு­கு­முறை, கல்­வியின் பல தனிப்­பட்ட மற்றும் கூட்டு நோக்­கங்­க­ளுக்­கான ஒருங்­கி­ணைந்த அணு­கு­மு­றையைக் குறிக்­கி­றது. கல்வி என்­பது தனிப்­பட்ட மற்றும் சமூக வளர்ச்­சி­யினை மைய­மாகக் கொண்­டது. அனைத்து மக்­களும் தங்கள் திற­மை­களை முழு­மை­யாக வளர்த்­துக்­கொள்ள உத­வு­வதும், அவர்­களின் சொந்த வாழ்க்­கையின் பொறுப்பு மற்றும் சமூ­கத்­திற்கு பங்­க­ளிக்கும் திறன் உள்­ளிட்ட அவர்­களின் படைப்புத் திறன்­களை உணர்ந்து கொள்­வதும் இதன் நோக்கம்.

அதாவது கல்வி என்­பது, வறுமை மற்றும் சமத்­து­வ­மின்­மையை எதிர்த்துப் போரா­டு­வது, உடல்­நலம் மற்றும் நல்­வாழ்வை மேம்­ப­டுத்­து­வது, பாகு­பாட்டை எதிர்­கொள்­வது போன்­ற­வற்­றுக்­கான ஒரு சக்­தி­வாய்ந்த வினை­யூக்­கி­யாகும்.

International Educational Day in Tamil  சிறுவர் கட்டுரை
International Educational Day in Tamil  சிறுவர் கட்டுரை

மேலும் தனி­ந­பர்கள் ஆரோக்­கி­ய­மான வாழ்க்­கையை வாழ்­வ­தற்கும் தமக்கும், அவர்­க­ளது குடும்­பங்­க­ளுக்கும், சமூ­கங்­க­ளுக்கும் ஆய்­வு­ரீ­தி­யான முடி­வு­களை எடுப்­ப­தற்கும் அது இன்­றி­ய­மை­யா­தது. இது ஜன­நா­ய­கத்­தையும் சட்­டத்தின் ஆட்­சி­யையும் வலுப்­ப­டுத்த உதவும். அத்­துடன் பாதிக்­கப்­ப­டக்­கூ­டிய மக்­களை மேம்­ப­டுத்­து­வதன் மூலம் சமத்­து­வத்தை மேம்­ப­டுத்த உதவும். இறு­தியில், வறுமை, பாலின சமத்­து­வ­மின்மை மற்றும் சமூகத் தனிமை போன்ற பல பரி­மாண சமூக சவால்­களை எதிர்­கொள்ள கல்வி நமக்கு உத­வு­கி­றது.

தனிப்­பட்ட மற்றும் கூட்டு மனித நட­வ­டிக்­கைகள் பூகோ­ளத்­திற்கும் அதன் இருப்­புக்கும் பெரும் அழுத்­தத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றன. சுற்­றுச்­சூழல் சீர­ழிவு, விரை­வான பல்­லுயிர் இழப்பு மற்றும் கால­நிலை மாற்றம் போன்­ற­வற்றை ஏற்­ப­டுத்தும் அதி­க­ரித்­து­வரும் அவ­சரப் போக்­கு­களை அவ­தா­னிக்­கையில், தற்­போ­தைய அபி­வி­ருத்தி முறை­களில் குறிப்­பி­டத்­தக்க மாற்­றங்கள் செய்­யா­விட்டால் மனித உயிர்­வாழ்வு ஆபத்­தா­ன­தாக மாறு­மென விஞ்­ஞா­னிகள் நமக்கு நினை­வூட்­டு­கி­றார்கள்.

முறை­யான, முறை­சாரா கற்றல் வாய்ப்­பு­க­ளி­னூ­டாக சுற்­றுச்­சூ­ழலின் நிலை­யான இருப்பு பற்­றிய அறி­வுள்ள சிறந்த சமூ­க­மொன்றை அரசு, சிவில் சமூகம் மற்றும் தனியார் துறையின் முன்­மு­யற்­சி­க­ளுடன் இணைந்து உரு­வாக்க முடியும். கல்­வியின் பெறு­மா­னங்கள் முன்­மா­தி­ரி­களை வடி­வ­மைக்­கி­றது. இது திறன்கள், கருத்­துகள் மற்றும் கரு­வி­களின் வளர்ச்­சிக்கு பங்­க­ளிக்­கி­றது. அவை நீடித்த நடை­மு­றை­களை மாற்­றி­ய­மைக்­கவோ அல்­லது நிலை­நி­றுத்­தவோ உத­வு­கின்­றன. மேலும் இயற்­கை­யான உல­கத்­துடன் மனி­தர்கள் ஒன்றி வாழ வழி­ய­மைக்­கின்­றன.

தொடர்ச்­சி­யான வன்­முறை மற்றும் ஆயுத மோதல்கள் அனைத்து மனித உரி­மை­க­ளையும் மதிப்­பி­ழக்கச் செய்­கின்­றன. மேலும் அவை பெரும்­பாலும் கல்வி உரி­மையை மீறு­கின்­றன. வன்­மு­றையைத் தடுப்­ப­தற்கும், நிலை­யான அமை­தியை அடை­வ­தற்கும் ஜன­நா­யக மற்றும் பிர­தி­நி­தித்­துவ நிறு­வ­னங்­களும் நன்கு செயற்­படும் நீதிக் கட்­ட­மைப்பும் அவ­சி­ய­மா­னது.

International Educational Day in Tamil சர்வதேச கல்வி தினம்,  சிறுவர் கட்டுரை
International Educational Day in Tamil சர்வதேச கல்வி தினம்,  சிறுவர் கட்டுரை

கல்வி என்­பது அர­சியல் பங்­கேற்பு, உள்­ள­டக்கம், வாதி­டுதல் மற்றும் ஜன­நா­யகம் ஆகி­ய­வற்­றுக்­கான ஒரு நிபந்­த­னை­யாகும். கல்வி, அமை­தியை ஊக்­கு­விக்கும்.

50 ஆண்­டு­களில் 100 நாடு­களின் தர­வு­க­ளுடன் மேற்கொள்ளப்பட்ட சமீ­பத்­திய ஆய்வில் , பாரிய கல்வி இடை­வெ­ளி­களைக் கொண்­ட­வர்கள் மோதலில் ஈடு­ப­டு­வ­தற்­கான வாய்ப்­புகள் அதிகமென்று கண்டறியப்பட்டுள்ளது. சமாதானத்தை வளர்ப்பதிலும் நல்லிணக்கத்திலும் கல்வி முக்கிய பங்கு வகிக்க முடியும்.

 

Kidhours – International Educational Day in Tamil

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.