Spread New Fever சிறுவர்களுக்கான உலக செய்திகள்
ஆபிரிக்கா நாடான உகண்டாவின் புண்டிபுக்யோ மாவட்டத்தில் உடலில் நடுக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மர்ம காய்ச்சலுக்கு சுமார் 300 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த காய்ச்சல் பெரும்பாலும் பெண்களைப் பாதிப்பதாகக் கூறப்படுகின்றது. இது காய்ச்சலும் அதிகமான உடல் நடுக்கமும் ஏற்பட்டு, எழுந்து நடப்பது கூட கடினமானதாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும் அங்கு எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை எனவும் இதற்காக எதிர்ப்பு சக்தி மருந்துகள் கொடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.
குறித்த நோய்த்தொற்று தொடர்பாக ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன விரைவில் இந்நோய் குறித்த அதிகாரபூர்வத் தகவல்கள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Kidhours – Spread New Fever
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.