World Largest Coral சிறுவர்களுக்கான உலக செய்திகள்
பிரமிக்கவைக்கும் உலகின் மிகப்பெரிய பவளப்பாறையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
குறித்த பாவலப்பறையானது பசுபிக் கடலின் தென்கிழக்கே சாலமன் தீவுக்கூட்டம் அருகே இந்த பவளப்பாறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த சாலமன் தீவுக்கூட்டத்தில் திரி சிஸ்ட்சர் தீவுக்கூட்டம் அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பளப்பாறையானது 34 மீட்டர் அகலம், 32 மீட்டர் நீளம், 5.5 மீட்டர் உயரம் கொண்ட உலகிலேயே மிகப்பெரிய பவளப்பாறை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது 300 முதல் 500 ஆண்டுகள் பழமையானது என்றும், குறிப்பிட்ட தூரத்தில் வானில் இருந்து பார்க்கும்போதும் பவளப்பாறை தெரியும் அத்துடன் இது பசுபிக் கடல்வாழ் உயிரினங்களின் வாழ்வில் பெரும் பங்காற்றுகின்றன.
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த பவளப்பாறைகள் தற்போது ஆரோக்கியமான நிலையில் காணப்படுவதுடன் ஆராய்ச்சியாளர்கள் உலக வெப்பமயமாதல் இந்த பவளப்பாறைக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் அதனை பாதுகாக்க சர்வதேச கடல் வாழ் அறிஞர்கள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றனர்.
Kidhours World Largest Coral
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.