Earthquake in Turkey சிறுவர்களுக்கான உலக செய்திகள்
ஐரோப்பிய நாடான கிழக்கு துருக்கியின் மலாத்யா மாகாணத்தில் உள்ள காலே நகரில் நேற்று(16) இந்த நிலநடுக்கம் (5.9 ரிக்டர்) பதிவாகியுள்ளது.
அத்துடன், இந்த நிலநடுக்கும் அருகில் உள்ள தியார்பகீர், எலாஜிக், சன்லியுர்ஃபா மற்றும் துன்செலி மாகாணத்திலும் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நிலநடுக்கத்தின் அச்சத்தினால் வீட்டின் ஜன்னல் வழியாக குதித்ததில் பலர் காயம் அடைந்துள்ளதாக எலாஜிக் மேயர் தெரிவித்துள்ளார்.
மேலும் நிலநடுக்கத்தால் 190 பேர் பாதிக்கப்பட்டதுடன் அவர்களில் 43 பேர் மருத்துவமனையில் கண்காணிப்பில் உள்ளதாக துருக்கி உள்துறை மந்திரி அலி யெர்லிகாயா கூறியுள்ளார்.
மாலத்யாவில் மொத்தம் நான்கு கட்டடங்கள் இந்த நிலநடுகத்தில் பாதிப்படைந்துள்ளதுடன் எலாஜிக்கில் நான்கு பேர் சேதமடைந்த கட்டடத்தில் இருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.மேலும், மலாத்யா மற்றும் எலாஜிக் பகுதிகளில் பாடசாலைகளை மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த வருடமும் துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் மலாத்யா மாகாணம் பாதிக்கப்பட்ட நிலையில் துருக்கியில் மாத்திரம் 53 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
Kidhours – Earthquake in Turkey
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.