Friday, December 27, 2024
Homeஉலக காலநிலைமில்டன் சூறாவளியின் பாரிய தாக்கம் Milton Cyclone

மில்டன் சூறாவளியின் பாரிய தாக்கம் Milton Cyclone

- Advertisement -

Milton Cyclone  மில்டன் சூறாவளி

- Advertisement -

அமெரிக்காவில் மில்டன் சூறாவளி புயல் உருவான நிலையில், அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியபோதும் தொடர் கன மழையால் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு, இருளில் தவித்தனர்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் சீஸ்டா கீ பகுதியருகே அந்நாட்டு நேரப்படி நேற்றிரவு 8.30 மணியளவில் மில்டன் சூறாவளி புயல் கரையை கடந்தது.
இதனால், மணிக்கு 195 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசி சென்ற சூறாவளி வலுவிழந்தது.
சூறாவளியின் தீவிரம் குறைந்தபோதும், அதிக ஆபத்து ஏற்படுத்தும் பிரிவிலேயே மில்டன் வைக்கப்பட்டு உள்ளது. ஆர்லேண்டோவுக்கு தென்மேற்கே 60 மைல்கள் தொலைவில் சூறாவளி மையம் கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

- Advertisement -

இதனால், புளோரிடாவின் அட்லாண்டிக் கடலோரத்தில் செயின்ட் லூசி கவுன்டி பகுதியில் சிலர் உயிரிழந்து இருக்க கூடும் எனவும் சிலர் காயமடிந்திருக்கலாம் எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

- Advertisement -
Milton Cyclone  மில்டன் சூறாவளி
Milton Cyclone  மில்டன் சூறாவளி

குறித்த சூறாவளி தாக்கியதில் நேற்றிரவு 11 மணியளவில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு, இருளில் தவித்தனர்.

சூறாவளியால் கனமழை பெய்து வருகிறது. இதனால் இன்னும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட கூடும் என எதிர்பார்க்கப்படுவதுடன் மீட்பு பணியிலும் பாதிப்பு ஏற்பட கூடும் என தெரிவிக்கபப்ட்டுள்ளது.

 

Kidhours – Milton Cyclone

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.