Super Computer சிறுவர்களுக்கான உலக செய்திகள்
சுவிட்சர்லாந்தில் அண்மையில் ஒரு மிகச் சக்திவாய்ந்த புதிய சூப்பர் கம்ப்யூட்டர் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த புதிய சூப்பர் கம்ப்யூட்டரை பொருளாதார அமைச்சர் கய் பார்மெலின் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்தார்.
தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் மையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், புதிய சூப்பர் கம்ப்யூட்டருக்கு “அல்ப்ஸ்” என்று பெயரிடப்பட்டது. இது உலகின் மிகச் சக்திவாய்ந்த சூப்பர் கம்ப்யூட்டர்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இந்த சூப்பர் கம்ப்யூட்டர், ஒரு சாதாரண லேப்டாப்பால் 40 ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும் கணக்கீடுகளை ஒரே நாளில் செய்யக் கூடியதாகக் கூறப்படுகிறது. உலகின் சக்திவாய்ந்த சூப்பர் கம்ப்யூட்டர்களின் வரிசையில் இது ஆறாம் இடத்தில் உள்ளது.
காலநிலை எதிர்வுகூறல்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) துறைகளில் இந்த சூப்பர் கம்ப்யூட்டர் முக்கிய பங்காற்றும் என தெரிவிக்கப்படுகிறது.
Kidhours – Super Computer
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.