Drinking Water Scarcity உலக காலநிலை செய்திகள்
வட அமெரிக்க நாடான கியூபாவில் தற்போது பாரியளவு தண்ணீருக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது கியூபாவின் தலைநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் உணவு மற்றும் எரிபொருள் என்பவற்றுக்குத் தட்டுப்பாடு நிலவி வருவதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்காரணமாகவே அங்குத் தண்ணீருக்குத் தட்டுப்பாடு நிலவி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் 30ஆயிரத்துக்கும் அதிகமானோர் தினமும் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் எதிர் வரும் ஆண்டுகளில் இவை அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.
தற்போது பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள கியூபா, தற்போது நிலவும் தண்ணீர் பற்றாக்குறை பாரிய சவாலாக மாறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
அந்த நாட்டில் எரிபொருளுக்கும் தட்டுப்பாடு நிலவுவதனால் நகரங்களுக்கிடையே நீரைக் கொண்டு செல்வது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாகக் கியூபா அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இது காலநிலை மாற்றம் மற்றும் முறையற்ற மனித செயற்பாடுகளினால் ஏற்பட்டவை என அறிஞர்கள் கூறுகின்றனர் .
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.