Para Olympic Games சிறுவர்களுக்கான உலக செய்திகள்
உலக பரா ஒலிம்பிக் போட்டிகள் இன்று செப்டம்பர் 8, ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைய உள்ள நிலையில், நேற்று சனிக்கிழமை பிரான்ஸ் தங்கம் வென்றது.
உலகின் பார்வையற்றோருக்கான உதைபந்தாட்ட போட்டியில் பிரான்ஸ் அர்ஜண்டினா அணிகள் மோதின. 1-1 கோல்களை பெற்றுக்கொண்ட இரு அணிகளுக்கும் பெனால்டி வழங்கப்பட்டது.
அதில் மிக சிறந்த முறையில் கோல் விளாசிய பிரான்ஸ் தங்கத்தை வென்றது. பிரான்சுக்கான 19 ஆவது தங்கப்பதக்கம் இதுவாகும்.
குறித்த பரா ஒலிம்பிக்கில் இதுவரை பிரான்ஸ் 19 தங்கம் உள்ளடங்கலாக மொத்தம் 74 பதக்கங்களை வென்றுள்ளது
.
Kidhours – Para Olympic Games
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.