News Meteorite about NASA பொது அறிவு செய்திகள்
நாசாவின் புதிய தகவல்
பூமியின் வளிமண்டலத்தில் வெடிப்புக்குள்ளான 9ஆவது விண்கல்லை மனிதகுலம் கண்டுள்ளதாக நாசா கூறியுள்ளது. அதாவது குறித்த விண்கல்லானது ஃபிலிப்பின்ஸ் – லூசானா தீவுக்கு மிக அருகில் வான் பரப்பில் நேற்றையதினம் அதிகாலை விண்கல் ஒன்று எரியுண்டது.
அதனை சிலர் காணொளியாகப் பதிவு செய்திருந்த நிலையில், அந்த காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகிறது. இதற்கு 2024ஆர்.டபிள்யு.ஐ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல், 1 மீற்றர் நீளமுடையது என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஒரு மீற்றருக்கும் குறைந்த நீளம் கொண்ட விண்கற்கள் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை பூமியில் விழுகின்ற போதும், அவை பூமியின் வளிமண்டலத்திலேயே எரிந்து அழிகின்றன.
எனினும் அவை எரிந்து அழிவதற்கு முன்னர் மனிதர்களால் அவதானிக்கப்படுவது மிகவும் அரிதாகவே நிகழ்கின்றது. இந்நிலையில், அவ்வாறு மனித குலத்தினால் அவதானிக்கப்பட்ட 9ஆவது விண்கல் இதுவென்று நாசாவின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தி வீடியோவுடன் வைரலாகி வருகின்றது.
Kidhours – News Meteorite about NASA
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.