Ban the Digital Screen சிறுவர்களுக்கான உலக செய்திகள்
தற்கால சமுதாயத்தில் குழந்தைகளின் மத்தியில் காணப்படும் பாரிய பிரச்சனையாக காணப்பட்டு வருகின்றது அந்தவகையில் ஐரோப்பாவின் ஸ்வீடன் நாட்டு பெற்றோருக்கு தொலைக்காட்சியோ அல்லது செல்போன் டிஜிட்டல் திரையோ 2 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் பார்க்க அனுமதிக்க வேண்டாம் என்று பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த நாட்டில் இரண்டு வயதுக்கு உள்பட்ட குழந்தைகளை, தொலைக்காட்சி மற்றும் செல்போன் திரைகளிலிருந்து தள்ளிவைக்க வேண்டும் என்று ஸ்வீடன் நாட்டு பொது சுகாதாரத் துறை பெற்றோருக்கு தெரிவித்துள்ளது.
அத்துடன் இரண்டு வயதுக்கு மேற்பட்ட மற்றும் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளும், நாள் ஒன்றுக்கு ஒரு மணி நேரம் மட்டுமே தொலைக்காட்சி அல்லது செல்போன் பார்க்க அனுமதிக்கலாம் என்றும் அந்த அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆறு முதல் 12 வயதுக்கு உள்பட்டவர்கள் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் வரை தொலைக்காட்சி பார்க்க அனுமதிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு புதிய மாற்றங்களை கொண்டுவந்தமை சமூக மட்டத்தில் பாரிய வரவேற்பயும் பெற்றுள்ளது.
Kidhours – Ban the Digital Screen
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.