Friday, November 8, 2024
Homeபொது அறிவு - உளச்சார்புசர்வதேச தினங்கள்சர்வதேச எழுத்தறிவு தினம் செப்டம்பர் 8 - International Literacy Day 8th of...

சர்வதேச எழுத்தறிவு தினம் செப்டம்பர் 8 – International Literacy Day 8th of September

- Advertisement -

International Literacy Day பொது அறிவு செய்திகள்

- Advertisement -

உலகில் உள்ள எந்த ஒரு மொழியில் எளிதான வார்த்தைகளை எழுதவும், படிக்கவும் தெரிந்திருப்பது எழுத்தறிவு என கருதப்படுகிறது. இதை வலியுறுத்தும் வகையிலும் மற்றும் விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் முகமாகவும் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 8-ம் தேதி சர்வதேச எழுத்தறிவுதினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

பொதுநலவாய அமைப்பாகிய ஐநாவின் ஓர் அங்கமான யுனெஸ்கோ அமைப்பு1966-ம் ஆண்டு நவம்பர் 17-ம் தேதி நடத்திய 14-வது கூட்டத்தில்தான் செப்டம்பர் 8-ம் தேதியை சர்வதேச எழுத்தறிவு தினமாக அறிவித்தது.

- Advertisement -

சர்வதேச எழுத்தறிவு தினம் பற்றிய 200 சொற்களில் மிக இலகுவான ஆங்கில சிறு கட்டுரை

- Advertisement -

அதாவது அடிப்படை எழுத்தறிவை கற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்துபொதுமக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்குவதும் எழுத்தறிவின் முக்கியத்துவத்தை உணர்த்துவதும் சர்வதேச எழுத்தறிவு தினத்தின் தலையாய நோக்கங்கள்.

உலகம் முழுவதும் எழுத்தறிவின்மையை வேருடன் அகற்றும் நோக்கத்தில் யுனெஸ்கோவின் ஐ.நா கல்வி அறிவியல் கலாச்சார அமைப்பு சார்பில் சர்வதேச எழுத்தறிவு தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

International Literacy Day பொது அறிவு செய்திகள்
International Literacy Day பொது அறிவு செய்திகள்

1967ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8ம் தேதி முதல் ஆண்டுதோறும் உலகம் முழுவதும் எழுத்தறிவு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

சர்வதேச அளவில் எழுத்தறிவு தினம் இன்னாளில் கொண்டாடுவதற்கு வரலாறும் உண்டு.

மனித குலத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றங்களுக்கு எழுத்தறிவு என்பது மிகப்பெரிய தடையாக இருப்பதை ஒரு கட்டத்தில் உலக நாடுகள் உணர்ந்தன.

இதையடுத்து, 1965ம் ஆண்டில் ஈரான் நாட்டின் தலைநகர் டெக்ரானில், உலக நாடுகளின் கல்வி அமைச்சர்களின் மாநாடு ஒன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில், ழுத்தறிவின்மையால் உலக நாடுகளில் ஏற்படும் அரசியல், சமூக பொருளாதார பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

உலகிலிருந்து எழுத்தறிவின்மையை அறவே ஒழிக்க தேவையான அனைத்து பணிகளையும், நடவடிக்கைகளையும் பட்டியலிட்டு அறிக்கை அளித்தது.

இதையடுத்து, 1966ம் ஆண்டு நவம்பர் 17ம் தேதி நடத்திய யுனெஸ்கோவின் 14வது பொதுக்குழுவில், எழுத்தறிவின்மையை போக்குவதற்காக மாநாடு நடைபெற்ற செப்டம்பர் 8ம் தேதி சர்வதேச எழுத்தறிவு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆண்டுகள் செல்லச்செல்ல எழுத்தறிவின் முக்கியத்துவத்தை புரிந்துக் கொண்டு உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்தனர்.

எழுத்தறிவு இல்லா சமூகத்தை உருவாக்க ஒரு மொழியை படிக்கவும், எழுதவும் தெரிவதற்கான விழிப்புணர்வை மக்களிடம் கொண்டுபோய் சேர்த்தனர். சேர்த்து வருகின்றனர்.
இதன்மூலம், எழுத்தறிவில் பின்னோக்கி இருந்த பல நாடுகள் முன்னேற்றம் கண்டு வருகின்றன.

International Literacy Day பொது அறிவு செய்திகள்
International Literacy Day பொது அறிவு செய்திகள்

எழுத்தறிவு என்பது ஒரு நபர் படிக்க அல்லது எழுதும் திறனை வளர்த்துக் கொள்வது மட்டுமல்லாமல், மக்களை இணைக்கவும், அதிகாரம் அளிக்கும் திறன், உலகத்துடன் தொடர்பு கொள்ளவும் உதவுகிறது. மொத்தத்தில், உலக நாடுகள் எடுத்த முயற்சிகளால் சர்வதேச அளவில் எழுத்தறிவு விகிதம் அதிகரித்து உள்ளது

குறைந்தபட்சம் 15 வயதுக்குட்பட்ட அனைத்து ஆண் மற்றும் பெண்களின் கல்வியறிவு விகிதம் 86.3% ஆகவும், 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஆண்களின் கல்வியறிவு விகிதம் 86.3% ஆகவும், 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஆண்களின் கல்வியறிவு விகிதம் 90% ஆகவும் உள்ளது.

அதே சமயம் உலகளவில் பெண்கள் 82.7% ஆக சற்று பின்தங்கிய நிலையில் உள்ளனர். இருப்பினும், நாட்டிற்கு நாடு பெரியளவில் வேறுபாடுகள் உள்ளன.
அந்டோரா, பின்லாந்து, லிச்டென்ஸ்டென், லக்சம்பர்க், வடகொரியா, நார்வே மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் 100 சதவீதம் எழுத்தறிவு பெற்றுள்ளன.

 

Kidhours – International Literacy Day

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.