Thursday, November 28, 2024
Homeசிறுவர் செய்திகள்போராட்டத்தில் 1,000க்கும் அதிகமானோர் பலியான பரிதாபம் எந்த நாட்டில் தெரியுமா? 1000 Dead in Struggle

போராட்டத்தில் 1,000க்கும் அதிகமானோர் பலியான பரிதாபம் எந்த நாட்டில் தெரியுமா? 1000 Dead in Struggle

- Advertisement -

1000 Dead in Struggle  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

தென் ஆசிய நாடான பங்களாதேஷில் கடந்த ஜூலை மாதம் முதல் அரசாங்கத்துக்கு எதிராக இடம்பெற்ற போராட்டங்களின்போது ஏற்பட்ட வன்முறையில் இதுவரைக்கும் 1,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த போராட்டமானது அரசாங்க வேலைகளில் மூன்றில் ஒரு பங்கு 1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து சுதந்திரம் பெறுவதற்கான நாட்டின் விடுதலை போரில் உயிரிழந்த படை வீரர்களின் உறவினர்களுக்கு ஒதுக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

- Advertisement -

இந்த எதிர்ப்பு ஆரப்பாட்டம் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான கிளர்ச்சியாக தீவிரமடைந்தது, போராட்டக்காரர்கள் பிரதமரின் இல்லத்தை ஆக்கிரமித்தனர்.

- Advertisement -

இந்நிலையில், போராட்டங்களின் போது ஏற்பட்ட வன்முறையில் 1,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 400 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கண்பார்வை இழந்துள்ளனர் என இடைக்கால சுகாதார அமைச்சகத்தின் தலைவர் நூர்ஜஹான் பேகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தின் போது பலருக்கு ஒரு கண்ணிலும், இரண்டு கண்களிலும் பார்வை பறிபோய்விட்டது. அத்தோடு, பலருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளதோடு, கால்களும் துண்டிக்கப்பட்டுள்ளது என மேலும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

Kidhours – 1000 Dead in Struggle

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.