Dengue Fever Risk சிறுவர்களுக்கான உலக செய்திகள்
பிரேசில் நாட்டில் அதிகரித்துவரும் டெங்கு காச்சல் பற்றி இணையத்தளங்களின் அறிந்திருக்கின்றோம் தற்போது கடந்த 4 மாதங்களில் இதுவரை 40 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ளதுடன் சுமார் 2 ஆயிரம் பேர் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளதாக தேசிய மற்றும் சர்வதேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் இவை பற்றி தெரியவருகையில்,ஏடிஸ் எஜிப்டி வகை கொசுக்களால் டெங்கு காய்ச்சல் பரவுவதாகவும் இதன் பாதிப்பு மிக அதிகமகா காணப்படுவதாகவும் இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் ஊடகங்களின் அறியமுடிகின்றது.
எனினும் ஆண்டுக்கு ஆண்டு அதன் பாதிப்பு அதிகரித்த வீதத்தில் செல்வதாக ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர்
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 10 லட்சம் பேருக்கு டெங்கு பரவியதாகவும் தற்போது 4 மடங்கு அதிகரித்துள்ளமையும் ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த அரசாங்கம் பொதுமக்களுக்கு தீவிர விழிப்புணர்வு மற்றும் புதிய தடுப்பு திட்டங்களால் அமிழ்படுத்தியும் வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது
Kidhours – Dengue Fever Risk
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.