Wednesday, December 18, 2024
Homeகல்விபொது அறிவு - உளச்சார்பு100 கோடி ஆண்டுகளில் முதன் முறை ஆச்சரியம் 100 Million Years Surprised

100 கோடி ஆண்டுகளில் முதன் முறை ஆச்சரியம் 100 Million Years Surprised

- Advertisement -

100 Million Years Surprised  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

கடந்த 100 கோடி ஆண்டுகளில் முதல் முறையாக இரண்டு வெவ்வேறு உயிரினங்கள் ஒரே உயிரினமாக இணையும் அதிசய நிகழ்வு நடந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த உலகம் பல்வேறு அதிசயங்கள் வினோதங்கள் நிறைந்ததாகவே இருப்பதுடன் பல சமயம் இயற்கையில் நடக்கும் விஷயங்கள் நமக்கு பெரும் வியப்பைத் தருவதாகவே அமைகிறது.

- Advertisement -

கடந்த நூறு கோடி ஆண்டுகளில் முதன்முறையாக தற்போது இவ்வாறான நிகழ்வு இடம்பெறுகின்ற நிலையில் இது வரும் காலத்தில் பல மாற்றங்களுக்குக் காரணமாக இருக்குமென ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.இவ்வாறு இரண்டு உயிர்கள் ஒரே உயிரினமாக ஒன்றிணைத்துள்ள இதை ஆய்வாளர்கள் பிரைமரி எண்டோசைம்பியோசிஸ் என்று குறிப்பிட்டுள்ளனர்.

- Advertisement -

இந்த பூமி உருவானது முதல் இதற்கு முன்பு வரை இரண்டே இரண்டு முறை மட்டுமே இந்த எண்டோசைம்பியோசிஸ் நிகழ்வு நடந்துள்ளது.
முதல்முறை நடந்த போது மைட்டோகாண்ட்ரியா என்று சிறு உயிரினம் உருவானதுடன் இதுவே அடுத்தடுத்து பல்வேறு வகையான உயிர்களும் தோன்ற வழிவகுத்தது.

அடுத்து இரண்டாவது முறை ஏற்பட்ட போது அது தன் தாவரங்களின் தோற்றத்திற்கு வழிவகை செய்ததுடன் இதற்கிடையே சர்வதேச ஆய்வாளர்கள் இப்போது மீண்டும் இதுபோன்ற நிகழ்வு நடப்பதை உறுதி செய்துள்ளனர்.
கடலில் பொதுவாகக் காணப்படும் ஒரு பாசி வகைக்கும் ஒரு பாக்டீரியாவிற்கும் இடையே தான் இந்த பரிணாம நிகழ்வு ஏற்படப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர் டைலர் கோலே தெரிவிக்கையில்”இந்த நிகழ்வு முதல்முறை நடந்த போது பல புதிய உயிரினங்கள் தோன்றின.அடுத்தடுத்து பல்வேறு உயிரினங்கள் தோன்ற இந்த மைட்டோகாண்ட்ரியா நிகழ்வு நடந்தது முக்கியமானதுடன் அதன் பிறகு மீண்டும் நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறை இந்த நிகழ்வு நடந்தது.

அப்போது நடந்த நிகழ்வை குளோரோபிளாஸ்ட் எனக் குறிப்பிடுவதுடன் செடி, கொடி போன்ற தாவரங்கள் உருவாக இதுவே முக்கிய காரணமாகும்” என தெரிவித்துள்ளார்.

இந்தச் சூழலில் சுமார் 100 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இதேபோன்ற ஒரு நிகழ்வு நடக்க உள்ளதுடன் இந்த செயல்பாடு போது பாசிக்கள் ஊட்டச்சத்துக்கள், ஆற்றல் மற்றும் பாதுகாப்பை வழங்கும்.அதற்குப் பதிலாகப் பாக்டீரியா இத்துடன் இணைவதுடன் இதுவரை பாசிகளால் சில செயல்முறைகளைச் செய்ய முடியாமல் இருந்தது.

இந்நிலையில் இந்த செயல்முறைக்குப் பிறகு அவை எல்லாம் மாறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் கடந்த இரண்டு முறையும் இந்த நிகழ்வுக்கு பிறகு உலகில் பல மாற்றங்கள் நடந்துள்ளதால் இப்போதும் அதுவே நடக்கும் என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

100 Million Years Surprised  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
100 Million Years Surprised  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

அத்தோடு இது பரிணாம வளர்ச்சி குறித்த புதிய புரிதலை வழங்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளதுடன் குறிப்பாக இவை விவசாயத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நமது உலகம் இப்போது இருக்கக் கடந்த காலங்களில் நடந்த பிரைமரி எண்டோசைம்பியோசிஸ் நிகழ்வுகளே முக்கிய காரணமாக இருந்துள்ளது.இந்தச் சூழலில் இப்போது மூன்றாவது முறையாக இந்த பிரைமரி எண்டோசைம்பியோசிஸ் நிகழ்வு நடந்துள்ள நிலையில் அது பல வித பரிணாம மாற்றங்களை ஏற்படுத்தலாமென தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Kidhours – 100 Million Years Surprised

 

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.