Helicopters Crash சிறுவர்களுக்கான உலக செய்திகள்
மலேசிய கடற்படைக்குச் சொந்தமான இரு ஹெலிகாப்டர்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி பத்து பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹெலிகொப்டர்களில் பயணம் செய்த அனைவரும் குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
🇲🇾
BREAKING- #Malaysia: Two Malaysian Navy helicopters crash after mid-air collision, killing 10 people on board.pic.twitter.com/n2z7wX0OrX— ConflictLive 💬 (@conflict_live) April 23, 2024
மலேசியக் கடற்படையின் 90-ஆம் ஆண்டு நிகழ்வுக்கான ஒத்திகையின் போது இந்த விபத்து ஏற்பட்டது.இன்று (2024.04.23) காலை 9 மணியளவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது இந்த இரு ஹெலிகாப்டர்களும் மோதி விபத்துக்குள்ளானது.
உயிரிழந்தவர்களில் ஓர் இந்தியரும் அடங்குவதாக தெரியவருகின்றது.
HOM மற்றும் FENNEC ரக ஹெலிகாப்டர்களே ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தைத் தொடர்ந்து உடல்களை மீட்கும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Kidhours – Helicopters Crash
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.