Saturday, November 30, 2024
Homeசிறுவர் செய்திகள்மூன்றாம் உலகப் போர்? எச்சரிக்கும் உலக நாடுகள் 3rd World War

மூன்றாம் உலகப் போர்? எச்சரிக்கும் உலக நாடுகள் 3rd World War

- Advertisement -

3rd World War  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

மத்திய தரைக்கடலின் தென்கிழக்கு கரையில் உள்ள இஸ்ரேலுக்கும், மேற்கு ஆசியாவில் பாரசீக வளைகுடாவில் அமைந்திருக்கும் ஈரானுக்கும் இடையில்தான் தற்போது போர் மேகம் சூழ்ந்துள்ளது. இஸ்ரேலும், ஈரானும் மோதிக் கொள்வதற்கு நேரடி எல்லைப் பிரச்சனை எதுவும் இல்லை. ஏனெனில் இரு நாடுகளுக்கும் இடையே இருப்பது ஈராக்.
ஆனால், இரு நாடுகளும் தற்போது மோதிக் கொள்வதற்கு முக்கிய காரணமாக இருப்பது பாலஸ்தீன பிரச்சனைதான். இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்திய நிலையில், அதற்கு மறைமுகமாக உதவி செய்த நாடுகளில் ஒன்று ஈரான்.

ஏனெனில், பல உலக நாடுகள் வேண்டுகோளை எல்லாம் புறந்தள்ளி, அமெரிக்கா தன்பக்கம் இருக்கும் தைரியத்தில், பாலஸ்தீனத்தின் மீது இடைவிடாது தாக்குதலை நடத்தி வந்தது இஸ்ரேல். ஆரம்பத்தில் பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதலை கைவிடக் கோரிய ஈரான், ஒரு கட்டத்தில் கடுப்பாகித்தான், ஹமாஸ் அமைப்புக்கு மறைமுகமாக ராணுவ உதவிகளைச் செய்யத் தொடங்கியது.

- Advertisement -

இது ஒருபுறமிருக்க, மற்றொரு புறம் ஈரானில் இருக்கும் ஹெஸ்புல்லா அமைப்பு நேரடியாகவே ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக களத்தில் குதித்தது. இதனால், சூடாகிப் போன இஸ்ரேல், தனக்கு அண்டை நாடான சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது வான்வழித் தாக்குதல் நடத்தி வஞ்சம் தீர்த்துக் கொண்டது.

- Advertisement -

இந்த தாக்குதலில் இஸ்ரேலுக்கு எதிராக இஸ்லாமிய படைகளை வழிநடத்திய முக்கிய தளபதிகள் இருவர் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் பலியானதால் கொதித்துப் போனது ஈரான். இதையடுத்து, இஸ்ரேல் – ஈரான் இடையே எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சனிக்கிழமை நள்ளிரவில் அதை தொடங்கி வைத்தது ஈரான்.

அடுத்தடுத்து 300 அதிபயங்கர ஏவுகணைகளை ஏவித் தாக்குதலை நடத்தியது ஈரான். இஸ்ரேலும் இதை எதிர்பார்த்திருந்ததால், அயர்ன் டோம் உதவியுடன் உடனடியாக பதிலடி தாக்குதலை தொடங்கிய நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானிய ஏவுகணைகளை சுட்டுவீழ்த்தும் நடவடிக்கையை தொடங்கியது அமெரிக்கா.

இவ்வாறு 99 சதவீத ஏவுகணைகளை இஸ்ரேலும், அமெரிக்காவும் அழித்தொழித்தாலும், எஞ்சிய ஒரு சதவீத ஏவுகணைகளை வெடிக்க வைத்தது ஈரான். இதனால், இஸ்ரேலின் பல நகரங்களில் கட்டடங்கள் சேதமடைந்திருப்பதோடு, மின் தடையும் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தங்கள் ராணுவத்தின் ரேடார் மற்றும் ஜிபிஎஸ் உள்ளிட்டவற்றை ஈரான் ஹேக் செய்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளது இஸ்ரேல்.

3rd World War  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
3rd World War  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

இவற்றுக்கு பதிலடியாக, ஈரான் நாட்டை நோக்கி ஏவுகணைகளை வீசி வரும் இஸ்ரேல், சிரியாவில் உள்ள ஈரான் ராணுவ நிலைகளையும் குறிவைத்து தாக்கத் தொடங்கியுள்ளது. இதனால், சிரியாவும் இஸ்ரேலுக்கு எதிரான போரில் குதிக்க வாய்ப்புள்ளதால், இது மூன்றாவது உலகப் போராக மாறும் ஆபத்து இருப்பதாக எச்சரிக்கின்றன உலக நாடுகள்.

 

Kidhours – 3rd World War

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.