Cyber Crime Countries சிறுவர்களுக்கான உலக செய்திகள்
உலகளாவிய ரீதியில் இணையதளக் குற்றங்கள் அதிகளவில் நடைபெறும் நாடு எது என்பது குறித்து சர்வதேச குழு ஒன்று ஆய்வு மேற்கொண்டது.
குறித்த ஆய்வானது ரான்சம்வேர், கிரெடிட் கார்ட் திருட்டு மற்றும் மோசடி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டு்ள்ளது.
இதன்படி இணையக் குற்றங்களில் ரஷ்யா முதலிடம் பிடித்துள்ளதுடன் உக்ரைன் 2 ஆவது இடத்தையும் சீனா 3 ஆவது இடத்தையும், அமெரிக்கா 4 ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.மேலும் நைஜீரியா 5 ஆவது இடத்தையும், ருமேனியா 6 ஆவது இடத்தையும் பிடித்துள்ளதுடன் 7ஆவது இடத்தை வடகொரியா பிடித்துள்ளது.அந்த வரிசையில் இங்கிலாந்து 8ஆவது இடத்தையும், பிரேசில் 9ஆவது இடத்தையும், இந்தியா 10ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.
![உலகில் இணையத்தளக் குற்றங்கள் நடைபெறும் நாடுகளின் தரவரிசை Cyber Crime Countries 1 Cyber Crime Countries சிறுவர்களுக்கான உலக செய்திகள்](https://www.kidhours.com/wp-content/uploads/2024/04/Untitled-design-96.jpg)
ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகியவை மிகப்பெரிய அளவில் தொழில்நுட்ப இணையத்தளக் குற்றங்களின் மையமாக விளங்கியமை இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
அத்துடன் நைஜீரியாவை சேர்ந்தவர்கள் தொழில்நுட்ப ரீதியான இணையத்தளக் குற்றங்களில் குறைந்த அளவில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Kidhours – Cyber Crime Countries
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.