Sunday, October 27, 2024
Homeசிறுவர் செய்திகள்சிவப்பு நிற மழை Red Rain

சிவப்பு நிற மழை Red Rain

- Advertisement -

Red Rain  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

ஸ்பெயின்(Spain) நாட்டுக்குப் பயணிக்க உள்ள சுற்றுலாப்பயணிகளுக்கு சிவப்பு நிற  இரத்த மழை தொடர்பில் பிரித்தானியாவால்(UK) எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

இந்த இரத்த மழையால், வெளிச்சம் போதாமையால் விமானங்கள் இரத்து செய்யப்படலாம் அல்லது தாமதமாகலாம் என பிரித்தானிய வெளியுறவு துறை அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.ஸ்பெயின் நாட்டில் சில இடங்களில் வெப்ப அலை காரணமாக கடுமையான வெயில் நீடித்து வருவதாக கூறப்படுகிறது.இதனால், சஹாரா பாலைவனத்தில் காணப்படும் தூசுக்கள் ஸ்பெயின் நாட்டின் பல பகுதிகளை மூட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் தற்போது ஸ்பெயின் நாட்டில் சில இடங்களில் மழை பெய்து வருவதால், இந்த தூசியும் மழையும் கலந்து இரத்த மழை என்னும் சிவப்பு நிற மழை உருவாக வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த இரத்த மழையினால் வெளிச்சம் குறையும் எனவும், விமானங்களால் பயணிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Red Rain  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Red Rain  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

இதன் காரணமாக ஸ்பெயினுக்கு சென்றுள்ள பிரித்தானியர்கள் குறித்த இயற்கை மாறுபாட்டால் பாதிக்கப்படக்கூடும் என பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் எச்சரித்துள்ளது.இந்த வார இறுதியில் பிரித்தானியாவை கேத்லீன்(Kathleen) என பெயரிடப்பட்டுள்ள புயல் வலிமையாக தாக்க இருப்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

Kidhours – Red Rain

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.