China’s Plan சிறுவர்களுக்கான உலக செய்திகள்
இந்தியாவின் அருணாசல பிரதேச(arunachal pradesh) எல்லையை ஒட்டி 175 கிராமங்களை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த கிராமங்கள் கண்காணிப்பு மையங்களாகவும் இராணுவ தளங்களாகவும் செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.ஆசியாவில் மிகவும் சக்திவாய்ந்த நாடாக மாறுவதற்கு சீனா முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.எனினும் அதற்கு தடையாக இந்தியா இருந்து வருகின்றமையால் இந்தியாவுடன் சீனா மோதல் நிலையை கடைபிடித்து வருகிறது.
இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான அருணாசல பிரதேசத்தையும் தெற்கு திபெத் எனக் கூறும் சீனா, அவ்வப்போது எல்லைகளை மீறி அத்துமீறியுள்ளதாக இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்நிலையில், தற்போது, அருணாசல பிரதேச எல்லையை ஒட்டிய பகுதியில் 175 கிராமங்களை சீனா அமைக்க தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Kidhours – China’s Plan
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.