Thirukkural 559 தினம் ஒரு திருக்குறள் கற்போம்
பொருட்பால் / அரசியல் / கொடுங்கோன்மை
”முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்.”
ஆட்சிமுறை கோணி மன்னவன் ஆட்சி செய்தால், பருவ மழையானது தவறிப் போக, மேகமும் வேண்டுங்காலத்து மழை பொழியாது ஒதுங்கிப் போகும்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் – புதிய உரை)
அரசன் முறை தவறி நாட்டை ஆட்சி செய்வானானால், அந்த நாட்டில் பருவமழை தவறி மேகம் மழை பெய்யாமல் போகும்.
—மு. வரதராசன்
ஆட்சியாளர் நீதி தவறினால் நாட்டில் பருவகாலமும் தவறி மழையும் பெய்யாது போகும்.
—சாலமன் பாப்பையா
![''முறைகோடி மன்னவன் செய்யின்.....'' தினம் ஒரு திருக்குறள் கற்போம் Thirukkural 559 1 Thirukkural 559 தினம் ஒரு திருக்குறள் கற்போம்](https://www.kidhours.com/wp-content/uploads/2024/03/thinam-oru-kural-kidhours-4-1-1-1-1-1-2-1-1.jpg)
முறை தவறிச் செயல்படும் ஆட்சியில் நீரைத்தேக்கிப் பயனளிக்கும் இடங்கள் பாழ்பட்டுப் போகுமாதலால், வான் வழங்கும் மழையைத் தேக்கி வைத்து வளம் பெறவும் இயலாது
—மு. கருணாநிதி
Kidhours – Thirukkural 559
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.