Sunday, October 27, 2024
Homeசிறுவர் செய்திகள்உலகிலேயே விலை உயர்ந்த பொருட்கள் World Most Expensive Products

உலகிலேயே விலை உயர்ந்த பொருட்கள் World Most Expensive Products

- Advertisement -

World Most Expensive Products  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

உலகில் உள்ள பெரும்பாலானவர்களின் கண்ணோட்டத்தில் அதிக விலை கொண்ட உலோகமாக தங்கம் பார்க்கப்படுகின்றது.

உலகம் முழுவதும் ஒவ்வாரு மனிதனின் செல்வத்தை குறிக்கும் பொருளாகவும் தங்கம் காணப்படுகின்றது.

- Advertisement -

தங்கம் தான் ஒரு வீட்டின் பொருளாதாரத்தையும் ஒரு நாட்டின் பொருளாதாரத்தையும் தீர்மானிக்கிறது என்றால் மிகையாகாது. ஆனால் இந்த உலகில் தங்கத்தை விட அதிக விலை கொண்ட பொருட்கள் எல்லாம் இருக்கின்றன.உலகில் விலை உயர்ந்த பொருட்களை பட்டியல் படுத்தினால் அதில் தங்கம் பல்வேறு உலோகங்களின் பின்னால் தான் இருக்கின்றது. தங்கத்தை மிஞ்சிய எத்தனையோ பொருட்கள் சாதாரண மக்களால் நினைத்தும் பார்க்க முடியாத விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.

- Advertisement -

அந்த வகையில் தங்கத்தை விடவும் பெருமதியான பொருட்களின் பட்டியல் குறித்து இந்த பதவில் பாரக்கலாம்.உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த கதிரியக்க தனிமமாக ஃபிரான்சியம் அறியப்படுகின்றது. ஒரு கிராம் ஃபிரான்சியத்தின் விலை ரூ.8,313 கோடி (இந்திய மதிப்பின் படி) ஆகும்.குறித்த தனிதத்தின் ஆயுட்காலம் 22 நிமிடங்கள் மாத்திரமே ஆகும். 22 நிமிடங்களின் பின்னர் இந்த உலோகம் வேறு உலோகமாக மாறிவிடும். இந்த மதிமம் தற்போது பயன்பாட்டில் இல்லை என்றாலும் உலகின் மிக விலை உயர்ந்த தனிமமாக ஃபிரான்சியமே காணப்படுகின்றது.

ஃபிரான்சியத்திற்கு அடுத்தப்படியாக விலையுயர்ந்த உலோகமாக காலிஃபோர்னியா பார்க்கப்படுகின்றது.கடந்த 1950 ஆம் ஆண்டு முதன்முதலில் காலிஃபோர்னியா பல்கழைகழகத்தில் உருவாக்கப்பட்டத இதன் காரணமாகவே இந்த தனிமத்திற்கு அந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ஒரு கிராம் காலிஃபோர்னியாவின் விலை ரூ.2.22 கோடி ஆகும். இதனை ஆண்டுக்கு அரை கிராம் மட்டுமே உருவாக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அனைத்து உயிரினங்களிலும் காணப்படும் கார்பன் என்பதும் மிகவும் விலையுயர்ந்த தனிமங்களில் ஒன்றாகும். வைர வடிவிலான கார்பன் ஒரு கிராமின் பெறுமதி ரூ. 54 லட்சம் ஆகும் அணு குண்டுகள், அணுமின் நிலையங்களில் பயன்படுத்தப்படும் புளூட்டோனியம் எனும் தனிமம் வைரத்திற்கு அடுத்த படியாக விலையுயர்ந்ததாக கருதப்படுகின்றது.

இவை எளிதில் தீப்பற்ற கூடியது என்பதால் இதனை சேமித்து வைப்பது மிகவும் கடினம். ஒரு கிராம் ரூ.3.3 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகின்றது.ஸ்காண்டியமும் ஒரு விலையுயர்ந்த தனிமமாகும். இத மிகவும் குறைந்த அளவில் தான் பூமியில் காணப்படுகின்றது.ஒரு கிராம் ஸ்காண்டியத்தின் விலை ரூ.22,000 வரை விற்பனையாகின்றது.பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் லுடேடியம் பூமியில் உள்ள அரிய உலோகமாகும்.

World Most Expensive Products  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
World Most Expensive Products  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

இது அல்கலைஷேன், ஹைட்ரஜனேட்டம், பாலிமரைசேஷன், போன்ற செயல்முறைகளில் அதிகமாக பயன்பாட்டில் இருக்கின்றது.நம்மில் பெரும்பாலனவர்களுக்கு பிளாட்டினம் பற்றி தெரிந்திருக்கும். மிகவும் வினைத்திறன் கொண்ட இந்த தனிமம் ஆபரணங்கள் செய்யவும் பயன்படுகின்றது. இதன் தேவை மிக அதிகமாக இருந்தாலும், ஆண்டுக்கு சில நூறு டண்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.

உலகின் மிகவும் பிரபலமான மற்றும் விலையுயர்ந்த உலோகங்களில் தங்கம் முக்கிய இடம் வகிக்கின்றது. உலகம் முழுவதும் தங்கத்திற்கு அதிக தேவை காணப்படுகின்றது.உலகின் விலையுயர்ந்த பொருட்களின் பட்டியலில் தங்கம் 10வது இடத்தை பெறுகின்றது. ஒரு கிராம் தங்கம் தற்போது 5800 வரையில் விற்பனை செய்யப்படுகின்றது.

 

Kidhours – World Most Expensive Products

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.