Wednesday, December 4, 2024
Homeசுகாதாரம்பிறந்த குழந்தைக்கு முடி நல்ல அடர்த்தியாக வளரனுமா..? For Kids Thick Hair

பிறந்த குழந்தைக்கு முடி நல்ல அடர்த்தியாக வளரனுமா..? For Kids Thick Hair

- Advertisement -

For Kids Thick Hair தேடல்

- Advertisement -

பெரியவர்களின் தலைமுடியை போலவே சிறு குழந்தைகளின் தலைமுடியை பராமரிப்பது பல காரணங்களுக்காக அவசியமாகிறது. பிறந்த குழந்தை மற்றும் சிறு குழந்தைகளின் ஸ்கால்ப் அதாவது உச்சந்தலையானது மிகவும் சாஃப்டானது மற்றும் சென்சிட்டிவானதும் கூட.எனவே அவர்களின் உச்சந்தலை மிக எளிதில் வறட்சி, எரிச்சல் மற்றும் பிற நிலைகளால் பாதிக்கப்பட கூடும். எனவே அவர்களுக்கு பெற்றோர்கள் பின்பற்றும் முறையான முடி பராமரிப்பு, குழந்தைகளின் முடியோடு சேர்த்து அவர்களின் தலைப்பகுதி சருமத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர்கள் வழக்கமான அடிப்படையில் பின்பற்றும் முடி பராமரிப்பு அவர்களின் முடி வளர்ச்சியை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. தவிர கெமிக்கல்ஸ் கலக்காத மென்மையான ஹேர் ஆயிலால் குழந்தைகளின் உச்சந்தலை மற்றும் தலைப்பகுதியில் மசாஜ் செய்வது அந்த குழந்தையின் தலையில் உள்ள மயிர்க்கால்களுக்கான ரத்த ஓட்டத்தைத் தூண்டி முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

- Advertisement -

குழந்தைகளின் முடி வலுவாகவும், ஆரோக்கியமாகவும் வளர்வதை உறுதி செய்கிறது. உங்கள் வீட்டில் சிறு குழந்தைகள் இருந்தால் அவர்களின் முடியை மென்மையாக பராமரிக்க நினைத்தால் சிறந்த ஹேர் ஆயிலை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பயன்படுத்துவது அவசியம். அந்த வகையில் உங்கள் குழந்தையின் தலைமுடிக்கு சிறந்த பலன்களை அளிக்கும் 5 ஹேர் ஆயில்களை இங்கே பார்க்கலாம்…

- Advertisement -

தேங்காய் எண்ணெய்: பெரும்பாலானோர் வீட்டில் அனைவரும் தவறாமல் பயன்படுத்தும் ஹேர் ஆயிலாக இருக்கிறது தேங்காய் எண்ணெய்.இந்த எண்ணெய் அதன் மாய்ஸ்ரைஸிங் பண்புகள் காரணமாக குழந்தைகளின் கூந்தல் பராமரிப்புக்கான பிரபலமான தேர்வாக இருக்கிறது.

குழந்தைகளுக்கு இந்த ஆயிலை தலையில் பயன்படுத்துவது அவர்களின் உச்சந்தலைக்கு ஊட்டமளித்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. தவிர வறட்சி மற்றும் செதில் உதிர்தலை தடுக்கிறது. இந்த எண்ணெயில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் குழந்தையின் சென்சிட்டிவான சருமத்திற்கு ஏற்றது.

பாதாம் எண்ணெய்: வைட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ் நிறைந்துள்ளதால் முடி ஆரோக்கியத்திற்கு பாதாம் ஆயில் மிகவும் நன்மைகளை அளிக்கும். இது முடியை மென்மையாக்க உதவுவதோடு ஷைனிங்காக்கவும் உதவுகிறது. இந்த ஆயிலை குழந்தைகளின் தலையில் பயன்படுத்துவது அவர்களின் ஸ்கால்ப்-ஐ சாஃப்டாக வைக்கவும், எரிச்சலின்றி வைத்திருக்கவும் உதவுகிறது.

ஜோஜோபா ஆயில் : இந்த எண்ணெய்-ஆனது scalp-ல் உற்பத்தியாகும் இயற்கை எண்ணெய்களை போலவே இருக்கும். எனவே Jojoba oil சிறு குழந்தைகளின் முடி பராமரிப்பிற்கான சிறந்த தேர்வாகும். இந்த ஆயில் உச்சந்தலையை மாய்ஸ்ட்ரைஸாக்கி வறண்டு போவதை தடுக்கிறது மற்றும் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இது non-greasy ஆயில் என்பதால் முடியில் ஒட்டாது மற்றும் முடியின் எடையை அதிகரிக்க செய்யாது. எனவே இது அனைத்து வகையான முடிக்கும் ஏற்றதாக இருக்கிறது.

ஆலிவ் ஆயில்: மாய்ஸ்ரைஸிங் மற்றும் கண்டிஷனிங் பண்புகள் காரணமாக குழந்தைகளின் முடி பராமரிப்புக்கான மற்றொரு பிரபலமான தேர்வாக ஆலிவ் ஆயில் உள்ளது. இந்த எண்ணெய்யை குழந்தைகளின் தலையில் பயன்படுத்துவது முடியை வலுப்படுத்த மற்றும் முடி உதிர்வை குறைக்க மற்றும் பளபளப்பாக வைக்க உதவுகிறது.

இந்த எண்ணெயில் நிறைந்திருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் ஸ்கால்ப் அதாவது உச்சந்தலையை சுற்றுச்சூழல் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க உதவும். எனினும் எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் ஆயிலை பயன்படுத்துவது அவசியம். ஏனெனில் இது குறைவாக ப்ராசஸ் செய்யப்படுகிறது மற்றும் அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கிறது.

For Kids Thick Hair தேடல்
For Kids Thick Hair தேடல்

ஆர்கன் எண்ணெய் (​Argan oil): இந்த எண்ணெயில் நிறைந்துள்ள அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின்ஸ் முடி மற்றும் உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். ஆர்கன் ஆயில் உலர்ந்த முடியை ஹைட்ரேட் செய்ய, நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்த மற்றும் முடி உதிர்வை தடுக்க உதவுகிறது. இது லைட்-வெயிட் மற்றும் non-greasy ஆயில் ஆகும். எனவே இது சிறு குழந்தைகளின் முடி உட்பட அனைத்து முடி வகைகளுக்கும் ஏற்றது. மேலும் இது கொண்டிருக்கும் லேசான நறுமணம் குழந்தைகளின் சென்சிட்டிவான மூக்கிற்கு மென்மையானதாக இருக்கும்.

Kidhours – For Kids Thick Hair

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.