World’s Smallest Washing Machine சிறுவர்களுக்கான உலக செய்திகள்
உலகிலேயே மிகச்சிறிய சலவை இயந்திரம் (Washing Machine) ஒன்றை உருவாக்கி, Guinness World Record படைத்துள்ளார்.
குறித்த இந்த கின்னஸ் சாதனை தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இந்திய மாநிலமான ஆந்திராவைச் சேர்ந்தவர் சாய் திருமலாநீதி.
இவர், உலகிலேயே மிகச்சிறிய சலவை இயந்திரத்தை (Washing Machine) உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
அது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது வீடியோவில், Washing Machine-யை சாய் திருமலாநீதி உருவாக்கும் செயல்முறை காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
சுவிட்ச் மற்றும் ஒரு சிறிய பைப் உள்ளிட்ட சிறிய பாகங்களை நுணுக்கமாக முறையில் பயன்படுத்தி ஒருங்கிணைக்கிறார்.
அத்துடன் முழுமையாக அந்த சிறிய சலவை இயந்திரம் செயல்பட தொடங்குகிறது.பின்னர், அந்த இயந்திரத்தில் தண்ணீரை ஊற்றி பவுடரை போட்டு சிறிய துணி ஒன்றையும் போடுகிறார்.
சிறிது நேரத்தில் அந்த துணியை வெளியே எடுத்தபோது அது சுத்தமாக காட்சி அளிக்கிறது.
Kidhours – World’s Smallest Washing Machine
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.