Thirukkural 523 தினம் ஒரு திருக்குறள் கற்போம்
பொருட்பால் / அரசியல் / சுற்றந் தழால்
”அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று.”
சுற்றத்தாரோடு மனங்கலந்து பழகாத ஒருவனுடைய வாழ்வானது, கரையில்லாத குளப்பரப்பிலே நீர் நிரம்பினாற் போலப் பயனற்றதாகும்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் – புதிய உரை)
சுற்றத்தாரோடு மனம் கலந்து பழகும் தன்மை இல்லாதவனுடைய வாழ்க்கை, குளப்பரப்பானது கரையில்லாமல் நீர் நிறைந்தாற் போன்றது.
—மு. வரதராசன்
சுற்றத்தாரோடு மனந்திறந்து உறவாடாதவன் வாழ்க்கை, கரை இல்லாத குளப்பரப்பில் நீர் நிறைந்திருப்பது போன்றது.
—சாலமன் பாப்பையா
![''அளவளா வில்லாதான் வாழ்க்கை.......'' தினம் ஒரு திருக்குறள் கற்போம் Thirukkural 523 1 Thirukkural 523 தினம் ஒரு திருக்குறள் கற்போம்](https://www.kidhours.com/wp-content/uploads/2024/02/thinam-oru-kural-kidhours-4-1-1-1-1-1-2-1-1.jpg)
உற்றார் உறவினர் எனச் சூழ இருப்போருடன் அன்பு கலந்து மகிழ்ந்து பழகாதவனுடைய வாழ்க்கையானது; கரையில்லாத குளத்தில் நீர் நிறைந்ததைப் போலப் பயனற்றதாகி விடும்
—மு. கருணாநிதி
Kidhours – Thirukkural 523
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.