15 Killed in Building Fire சிறுவர்களுக்கான உலக செய்திகள்
சீனாவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில், 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் 44க்கும் மேற்பட்டோர் காயமுற்று, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவில் நான்ஜிங் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இன்று (2024.02.24) தீ விபத்து ஏற்பட்டது.
தீ வேகமாக பரவ துவங்கியது. இதனால் குடியிருப்பில் வசித்து வந்த மக்கள் வெளியேற முடியாமல் சிக்கி கொண்டனர்.சிலர் தீ பற்றியதும் குடியிருப்பை விட்டு வெளியேறினர். இந்த தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். 44க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில் மின்சார மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து தீ பற்றியது தெரிய வந்துள்ளது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Kidhours – 15 Killed in Building Fire
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.