Rabbit Disturbance சிறுவர்களுக்கான உலக செய்திகள்
சுற்றுலாவிற்கு பிரசித்தமான நகரமாக விளங்கும் பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் தற்போது முயல்களின் தொல்லைகளுக்கு ஆளாகியுள்ளது.
நெப்போலியனின் கல்லறையைச் சுற்றி இருக்கும் பூங்காவையும் சாக்கடையையும் காட்டு முயல்கள் சேதம் செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், முயல்களை பிடித்து வேறு இடத்திற்கு மாற்ற முயற்சிகள் கடந்த ஜனவரி மாதம் இறுதியில் முயல்களைப் பிடிக்கும் பணியைத் தொடங்கிய நகர பொலிஸார் பிடிக்கப்படும் முயல்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டு, அவை வேறு இடத்தில் விடுவிக்கப்படுவதாக நகர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கு விலங்கு உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.பிடிக்கப்படும்போதும் வேறு இடத்திற்கு மாற்றப்படும்போதும் முயல்கள் இறந்துபோகக்கூடும் என்று விலங்கு உரிமை அமைப்புகள் எச்சரித்தன.
ஆனால், முயல்கள் வேட்டையாடப்படுவதில்லை என்று பாரிஸ் நகர பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.
Kidhours – Rabbit Disturbance
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.