Tuesday, December 3, 2024
Homeகல்விபொது அறிவு - உளச்சார்புபூமியை அளந்த விஞ்ஞானி பற்றி தெரியுமா? Scientist of Earth Measured

பூமியை அளந்த விஞ்ஞானி பற்றி தெரியுமா? Scientist of Earth Measured

- Advertisement -

Scientist of Earth Measured  பொது அறிவு செய்திகள்

- Advertisement -

நாம் வாழும் பூமியை அளந்து பார்க்கும் ஆவல், 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே, ஒரு மனிதனுக்கு ஏற்பட்டிருக்கிறது.  ஆம்.. ! அவர்தான் கிரேக்க விஞ்ஞானி அரடோஸ்தான்ஸ்  (Aratosthanes).

கி.மு.276-ல் லிபியாவில் உள்ள சைரீனில் பிறந்தவர் அவர். அலெக்சாண்டிரி யாவில் இலக்கணமும், ஏதென்ஸில் தத்துவமும் படித்தார். கி.மு 236-ல் அலெக் சாண்டிரியாவில் உள்ள ஒரு நூலகத்திற்கு நூலகரானார். இங்குதான் எரடோஸ் தனிஸ் கணிதத்திலும், அறிவியலிலும் பல முக்கிய கண்டுபிடிப்புகளை வெளியிட்டார்.

- Advertisement -

பூமியின் மேல்புறம் சூரிய ஒளியால் உருவாகும் நிழலை வைத்து, பூமியின் அனைத்து பரிமாணங் களையும் கண்டறிந்த இவர், உலகில் முதன் முதலில் பூமியின் விட்டத்தையும் சுற்றளவையும் அளந்து சொன்னார். அட்சரேகை, தீர்க்க ரேகை என்கிற அளவீட்டு முறைகளையும் அறிமுகப்படுத்தினார். புவியியலின் ஒழுங்குமுறை விதிகளை வகுத்ததும் இவரே. வானவெளியை உற்று நோக்கியது போலவே, பூமியையும் கவனித்து, கணக் கிட்டு பல உண்மைகளை இவர் கண்டறிந்தார்.

- Advertisement -

சூரிய உதயம் என்பது ஆறு மாதம் வடக்கிலிருந்து தெற்காகவும், அடுத்த ஆறு மாதம் தெற்கிலிருந்து வடக்காகவும் நகர்ந்து கொண்டே இருப்பதை கவனித்தார். இதிலிருந்துதான் பூமியின் விட்டம் அறியும் ஆராய்ச்சி ஆரம்பமானது.
சூரியக் கதிரின் சாய்மானம், நிழலின் சாய்மானம் இவற்றை வைத்து, பூமி 23.5 டிகிரி சாய்மானத்தில் சுழலுகிறது என்று கணித்ததோடு, புவியின் சுற்றளவையும் சரியாகக் கணித்துச் சொன்னார்.

Scientist of Earth Measured  பொது அறிவு செய்திகள்
Scientist of Earth Measured  பொது அறிவு செய்திகள்

அத்துடன் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் ‘லீப்’ தினத்தையும் கண்டறிந்தார். முதன்முதலில் உலக வரைபடத்தை தயாரித்தவரும் இவர்தான்.
எரடோஸ்தனிஸ் எழுதிய புவியியல் புத்தகம் 3 தொகுதிகளாக வெளிவந்துள் ளது. புவியியல் ஆராய்ச்சிக்கு ஆதார நூல்களாக இவை விளங்கி வருகின்றன. இத்தனை சாதனைகளை செய்த எரடோஸ்தனிஸுக்கு 80-வது வயதில் பார்வை பறிபோனது.

ஒரு மனிதனுக்கு பார்வை போன பிறகு வாழ்வது கொடுமை எனக் கருதிய இவர், பல நாட்கள் உண்ணாநோன்பிருந்து கி.மு 194-ல் மறைந்தார்.

உலகின் நில அளவீட்டாளர், கணக்காளர், புவியியல் தந்தை என்றெல்லாம் கொண்டாடப்பட்ட எரடோஸ்தனிஸுக்கு பெருமை சேர்க்கும் விதமாக சந்திரனில் உள்ள ஒரு பள்ளத்திற்கு இவர் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

 

Kidhours – Scientist of Earth Measured

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.