Panda Bear’s Communication சிறுவர் சிந்தனைகள்
பாண்டா கரடிகள் என்றால் கருப்பு வெள்ளை நிறத்தில், அழகாக புசுபுசு என்று இருப்பவை என்று அறிவோம். இவை தனியாகவே வாழ்- பவை என்பதுதான் பலரதும் எண்ணப்பாடு. இது முற்றிலும் உண்மை அல்ல. அருகிவரும் உயிரினமான பாண்டா கரடிகள் பல்வேறு இயற்கை பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
பொதுவாக இவை கூட்டமாக வாழாமல் தனியாகவே வாழ்கின்றன என்பதால், இவை தங்களுக்குள் தகவல் பரிமாற்றம் செய்து கொள்வதில்லை என்று கருதப்பட்டு வந்தது.
ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த மிச்சிகன் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில், இந்தக் கரடிகள் தங்களுக்குள் ஒருவித வாசனை வாயிலாக, தகவல் பரிமாற்றம் செய்துகொள்கின்றன. என்பது தெரியவந்துள்ளது.
நாம் எப்படி முகநூலில் நம் கருத்துகளை, நம்மைப் பற்றிய விபரங்களை அறிவிக்கி- றோமோ, அதுபோல் இந்தக் கரடிகள் தாங்கள் வாழும் மரங்களில், தங்களைப் போன்ற பாண்டாக்களுக்குப் புரியும் வகையில், தங்கள் உருவம், வயது, பாலினம் முதலிய தகவல்களை வாசனைகள் வாயிலாகப் பரிமாறி கொள்கின்றன.
சிறு வயது பாண்டாக் கள் தங்கள் பெற்றோர், குடும்பத்தினருடன் மட்- டுமே தகவல் பரிமாற்றம் செய்து கொள்கின்றன. ஆனால், பருவ வயது வந்ததும், தங்கள் குடும்- பத்தினரை விடுத்து வேறு பாண்டாக்களுடன் மட்டுமே
தகவல்களைப் பரிமாறுகின்றன.
![பண்டா கரடியின் தகவல் பரிமாற்றம் பற்றி தெரியுமா? Panda Bear's Communication 1 Panda Bear's Communication சிறுவர் சிந்தனைகள்](https://www.kidhours.com/wp-content/uploads/2024/02/Untitled-design-2024-02-06T185134.768.jpg)
இப்படியான நிறைய சுவாரஸ்யமான விஷயங்கள் ஆய்வில் தெரியவந்துள்ளன. அருகிவரும் பாண்டாக்களைக் காப்பாற்ற இந்தத் தகவல் பரிமாற்ற நுட்பம் பயன்படுமா என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
Kidhours – Panda Bear’s Communication
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.